Google search engine
இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் ரூ. 5 கோடி தராவிட்டால் அவரை சுட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டிய நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானின் மேலாளரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தன்னை பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ரூ.5 கோடி தராவிட்டால் சல்மான் கானை,...
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதி இடைத்தேர்தல் கருதப்படுகிறது. இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக.வைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களை சந்தித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 36 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில்,...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர் ஜி கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கக் கோரியும் பயிற்சி மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த...
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 1994-ம் ஆண்டு முல்லா உமர் மற்றும் அப்துல் கனி பராதர் இணைந்து தலிபான் இயக்கத்தைதொடங்கினர். தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், 1996-ல் ஆட்சியை கைப்பற்றியது. 2001-ம் ஆண்டு அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டது....
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, விவசாய கழிவுகளை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பின்பு மிஞ்சும் கழிவுகளை எரிப்பதால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் காற்று மாசு மேலும் அதிகரித்தது. காற்றின் தர குறியீடு எண்...
‘‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. மொத்தம் உள்ள 538 வாக்காளர்கள்...
‘‘மக்கள்அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது’’ என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்....
இலகுரக மோட்டார் வாகனத்துக்கான (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் 7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வணிகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவர் போக்குவரத்து வாகனங்கள் ஓட்டுவதை 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2017-ல் சாத்தியமாக்கியது. இதற்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவில் "எல்எம்வி...
போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ம.பி.துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா நேற்று கூறியதாவது: மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வுக்கு 40 வயதில் 50 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவிர கூடுதலாக...
ஸ்ரீநகர்: அரசியல்சாசனத்தில் 370 சட்டப்பிரி வின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி...