Google search engine
பெங்களூரு: பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் வழக்கில் ஜாமீனில்வெளியே வந்தவர்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் பாராட்டு விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப். 5-ம் தேதி வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது....
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் - செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . ஜார்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்...
மும்பை: மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டியின் (எம்எஸ்எஸ்யு) பெயர் ரத்தன் டாடா மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி என மாற்றப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த புகழ்பெற்றதொழிலதிபரும் நன்கொடையாள ருமான ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி...
புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பாபா சித்திக்கீ, கடந்த சனிக்கிழமை இரவு மும்பைபாந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் உட்பட 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். ஷிவ்குமார் கவுதம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக பிரபல மும்பை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் முகநூலில் பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் மும்பை நிழல் உலக தாதாவாக தாவூத் இப்ராகிம் செயல்பட்டு வந்தார்....
லக்னோ: பசு தொழுவத்தை சுத்தம் செய்து, அங்கேயே படுத்துறங்கி வந்தால் புற்றுநோய் குணமாகும் என உ.பி. அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் கூறியுள்ளார். உத்தரபிரதேச பாஜக அரசில் கரும்பு வளர்ச்சித் துறைக்கான அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிங் கங்குவார். இவர் தனது பிலிபித் தொகுதிக்குட்பட்ட பகாடியாஎன்றஇடத்தில் பசு காப்பகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலை, மாலை இருவேளையும் பசுவின் முதுகில்...
நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உதவி செய்ய வேண்டும். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழப்பு அவமானகரமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தர்மம் என்பது ஒரு மதம் கிடையாது....
புதுடெல்லி: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது: நாடு முழுவதும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்கீழ், நாடுமுழுவதும் தடுப்பணைகளை கட்டுதல், நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்தல் உட்பட 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி (ஜேஎஸ்ஜேபி) என்ற இந்த புதிய முன்முயற்சி, கடந்த 2019-ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை...
திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே இனி சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேரள அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீஸன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது. சபரிமலையில் மண்டலம்-மகரவிளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்பாட்புக்கிங் எனப்படும் நேரடியாக வந்து பதிவு செய்யும் முறை இனி கிடையாது என...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 37, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றின. இந்த...
வடவனூர்: எம்ஜிஆர் இலங்கையின் கண்டியில் பிறந்தாலும், குழந்தைப் பருவத்திலேயே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடகன்னிகாபுரத்துக்கு வந்துவிட்டார். அவரது குழந்தைப் பருவகாலம் முழுவதும் அந்த வடவனூர், வடகன்னிகாபுரம் கிராமங்களில்தான் கழிந்தது. இந்த வடகன்னிகாபுரத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1898-ல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழ் வருகிறது. இந்த பழமை வாய்ந்த ரயில் நிலையம் பாலக்காடு - பொள்ளாச்சி தடத்தில் அமைந்துள்ளது....