அமராவதி: அரசியலில் தனக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுகவின் 53-வதுஆண்டு விழாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று சமூக வலைதளம் மூலம்அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் அவர், “எம்ஜி. ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை நிறுவி,தமிழக அரசியலில்...
ஏழுமலையான் கோயிலுக்கு பல வளர்ச்சிப் பணிகள் செய்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் 495-வது நினைவு தினம் அனுசரிப்பு
admin - 0
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது.
இதில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டையிலும் வாசம்செய்துள்ளார். அவர் விஜயநகரத்தில் இருந்து சந்திரகிரிக்கு வரும் போதெல்லாம், திருமலைக்கு தனது பட்டத்து ராணிகளான திருமல தேவி மற்றும் சின்னமாதேவி ஆகியோருடன் திருமலைக்கு...
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில்மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெறும். இதற்கு முன்னதாக, ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலுக்கு மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேல்சாந்தி பணிக்கு ஏராளமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட தேர்வுக்கு பிறகு அதில் இருந்து ஐயப்பன் சன்னதிக்கு 24 பேரும்,...
பிஹாரில் கள்ள சாராயம் குடித்த 25 பேர் உயிரிழப்பு: நிதிஷ் குமார் அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
admin - 0
பாட்னா: பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்தது. இதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், அடிக்கடி கள்ளச்சாராயம் குடித்துஉயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் சிவான் மாவட்டம், பகவான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மதர் கிராமத்தை சேர்ந்த பலர் கடந்த செவ்வாய்க்கிழமை...
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஜாகுர் அகமது...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.சரின் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் சரின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில காங்கிரஸ் பிரிவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட 3...
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்13-வது நாளை எட்டியது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதிகிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில்...
புதுடெல்லி: ராமாயணம் இதிகாசத்தை இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார்.
அங்குள்ள வால்மீகி சிலையை வழிபட்டவர் பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் பார்வையிட்டார். அதிலும் காந்தியடிகள் 200 நாட்களுக்கு மேல் தங்கிய ஓர் அறைஅந்த கோயிலில் உள்ளது. அங்குகாந்தியடிகளின் பலவிதமானபுகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து...
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியை பலம் பெறச் செய்வதற்காக ஆம் ஆத்மி இம்முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. சமீபத்திய ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. ஹரியானாவில் முற்றிலும் தோல்வி அடைந்தாலும் ஜம்முவில் ஒரு தொகுதி கிடைத்தது. ஜம்முவின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்...
பாலி மொழிக்கான செம்மொழி அந்தஸ்து புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை போற்றும்: பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது: தொன்மையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட உதவும். அதேநேரம், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி...










