இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் அடிக்கடி மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு...
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து முதல் ஜேபிசி கூட்டத்தில் ஆலோசனை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
admin - 0
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பாஜக எம்பி பி.வி. சவுத்ரி உள்ளார்.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே...
கர்நாடகாவில் கடந்த மாதம் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் விக்ரம் கவுடா போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து நக்சல் ஒழிப்புபடை அதிகாரிகள் அமைதிக்கான மக்கள் மன்றத்தின் உறுப்பினர் லலிதா நாயக் மூலம் தலைமறைவாக உள்ள நக்சலைட்டு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 பேர் சரணடைய விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி 6 பேரும் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா முன்னிலையில் அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் சரண் அடைந்தனர்....
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள...
கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளர். அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே...
கடந்த 40 ஆண்டுகளாக வங்க தேச விசா நீட்டிப்பில் பிஹாரில் வசித்த சுமித்ரா பிரசாத், குடியுரிமை திருத்த சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.
பிஹாரின் கதிகார் மாவட்டத்தில் பிறந்தவர் சுமித்ரா (40). இவர் கடந்த 1970-ம் ஆண்டு தனது 5-வது வயதில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றார். பின்பு அங்கேயே தங்கி வளர்ந்தார். பள்ளி படிப்பையும் அங்கு முடித்தார். கிழக்கு பாகிஸ்தான் கடந்த...
பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரின் சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் முடக்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவைச் சேர்ந்தவர் முபாஷிர் அகமது. இவர் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று முடக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “முபாஷிர் அகமதுவின் அசையா சொத்து டிரால் மண்டலத்திலுள்ள சையதாபாதில்...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது. இந்நிலையில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்றுமுன்தினம் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையைச் சேரந்த கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தியோ சாய் கூறுகையில், “நக்சலைட்டுகளின் கோழைத்தனமான ஈவுஇரக்கமற்ற தாக்குதலில்...
இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
பாரத மண்டபத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை...










