கும்பமேளாவுக்கு புனித யாத்திரையாக ஹைதராபாத்தில் இருந்து சென்ற 8 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் சென்று, அங்குள்ள நதியில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட ஹைதராபாத் நாசாரம் பகுதியை சேர்ந்த 14 பேர் தனியார் மினி பேருந்து மூலம் புறப்பட்டு சென்றனர். இவர்கள் தெலங்கானாவில்...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால் அதை சுற்றியுள்ள வாராணசி, அயோத்தியில் கூட்டம் குவிகிறது. இதனால், இந்த மூன்று நகரங்களிலும் விவிஐபிகளுக்கான சிறப்பு வசதிகளை அரசு ரத்து செய்துள்ளது. உத்தரபிரதேசம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா ஜானவரி 13 முதல் நடைபெற்று வருகிறது. இதன் 6 ராஜகுளியல்களில் முக்கிய ஒன்றான மவுனி அமாவாசை ராஜகுளியல் முடிந்த பின்பும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.44...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகாது என்று பாரிஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்றிரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவருக்கு விருந்து அளித்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு...
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாரிஸில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமரை சந்தித்தேன். ஏஐ தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் பற்றியும், எப்படி கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்கு...
‘‘ஆம் ஆத்மி கட்சியின் மதுபான கொள்கை, அர்விந்த் கேஜ்ரிவாலை வீழத்தி விட்டது ’’ என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் நெருக்கமானார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரேவை அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கடி சந்தித்து பேசினார்....
தொழில​திபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானி​யின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்​குநருமான ஜீத் அதானிக்​கும் வைர வர்த்​தகர் ஜெய்​மின் ஷா மகள் திவாவுக்​கும் அகமதாபாத்​தில் கடந்த 7-ம் தேதி திரு​மணம் நடைபெற்​றது. இதில் மணமக்​களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்​றனர். உலக கோடீஸ்​வரர்கள் பட்டியலில் இடம்​பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானி​யின் திரு​மணத்தை எளிமையான முறை​யில் நடத்தி உள்ளார். இதில் அரசி​யல்​வா​தி​கள்,...
பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி டெல்லியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார். டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடி, மத்திய...
மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்தியஅரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான...
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கரில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சத்தீஸ்கர்...
ஒருங்​கிணைப்​பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி​யின் முக்கிய தலைவர்கள் தேர்​தலில் தோல்​வி​யுற்ற நிலை​யில் ஆதிஷி மட்டும் தனது வெற்றியை ஆட்டம் பாட்​டத்​துடன் கொண்​டாடிய வீடியோ சமூக வலைதளங்​களில் வைரல் ஆனது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி​யின் அதிருப்தி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் எக்ஸ் பதிவில் கூறுகை​யில், “என்ன வெட்​கமற்ற வீடியோ காட்சி இது. கட்சி தோற்று​விட்டது. அக்கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிட்ட கேஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட...