மத்திய பிரதேசத்தில் 92,071 அரசு பள்ளிகள் உள்ளன. 3.93 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஆசிரியர்கள் ஈடுபடுவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது.
அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் இரு...
டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பிரார்த்தனையில் பங்கேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவ...
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் சென்று...
திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட பாக். பெண்ணுக்கு வாஜ்பாய் பதில் – சம்பவத்தை நினைவுகூர்ந்த ராஜ்நாத் சிங்
admin - 0
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்வாக தினம்’ என்று மத்திய அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. சிறந்த அரசியல் தலைவரான வாஜ்பாய், கவிஞராகவும் இருந்தார். அவருடைய நினைவாக...
”டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுகட்டமைக்கு இந்தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
டிட்வா புயலால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்துள்ளது. ஏராளமான சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், ஏற்கெனவே இந்தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.
தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை வந்துள்ளார்....
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் ‘புளூபேர்ட்’ – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
admin - 0
முன் எப்போதும் இல்லாத அதிக எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான...
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதால் வழக்கை திரும்பப் பெற அம்மாநில அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக்(52) என்பவர், தனது வீட்டின் பிரிஜ்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து கடந்த செப்டம்பர் 28, 2015 இல்...
“சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு, சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்கள் ஆதரவை இழந்துவிட்டன. அவர்கள் ஒன்று சேர்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்களின் இந்த ஒன்றிணைவு பற்றி செயற்கையாக ஒரு பரபரப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே...
ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளப் போவதாக சிவ சேனா (உத்தவ் தாக்கரே), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவின் முக்கிய மாநில கட்சிகளாக சிவ சேனா (யுபிடி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை விளங்கி வருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே இருந்த பகை காரணமாக இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு வந்தன.
இந்நிலையில், வரக்கூடிய மகாராஷ்டிர உள்ளாட்சித்...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, 'தி இந்து' நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) புல்டோசர் அழிப்பு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக, டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது அனைவருக்கும் நல்வாழ்வு...
