மணிப்​பூரில் ஆளுநரின் பரிந்​துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. மாநிலம் முழுவதும் பாது​காப்பு பலப்​படுத்தப்பட்​டுள்​ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்​குடியின மக்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதன்​காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்​கும்...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்துக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை...
க்ஃபு மசோதாவின் கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் நேற்று கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. அதிருப்தி கருத்துக்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதான அவதூறு கருத்துக்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வக்ஃபு வாரிய சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காக வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது....
தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் பெண்களின்...
சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில், அம்மாநில கலால் துறை சிறப்பு செயலாளரும் மாநில சந்தை கூட்டுறவு நிறுவன இயக்குநருமான அருண் குமார் திரிபாதியை கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரிபாதி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், திரிபாதி மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறவில்லை எனக் கூறிய...
டெல்லி ஜாமியா நகரில் கடந்த திங்கட்கிழமை ஷாபாஸ் கான் என்பவரை ஒரு வழக்கில் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் தலைமையிலான கும்பல் தங்களை தாக்கியதாகவும் இதில் ஷாபாஸ் கான் தங்கள் பிடியில் இருந்து தப்பி விட்டதாகவும் டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அமானுல்லா கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமானுல்லா கான் முன்ஜாமீன் கோரியிருந்தார்....
உலகெங்கிலும் உள்ள காதலர்கள் இன்று காதலர் தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்காகவே ஒரு செடி இந்த பூமியில் உள்ளது. அது காதலர்களின் செடியாக பெயர் சூட்டப்பட்டு புகழ் பெற்று வருகிறது. காதலர்கள் தங்கள் பெயரை பழங்கால சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே ஒரு செடி உள்ளது. இதனை 'வேலண்டைன்ஸ் ட்ரீ’ என்று அழைக்கின்றனர். இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளுசியா ரோஸியா’ ஆகும். அதிக...
சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே ஜுன், ஜூலையில் சுற்றுலா கப்பல் இயக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்....
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, F-35 போர் விமானங்களை வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, வர்த்தக ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பிலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டுவிட்டார். அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர்...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசா​ரியாக இருந்​தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்​களாக உடல்​நலம் குன்றி இருந்​தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்​டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்​கிருத மகா வித்​யால​யா​வில் உதவி ஆசிரியராக சேர்ந்​தார். ராமரின்...