Google search engine
கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இண்டியா கூட்டணியை சார்ந்த மாணவர் அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரைக்கும் நபர்கள் மட்டுமே பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளன. மகா கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்....
ஆம் ஆத்மி ஆட்சி குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த பிப்ரவரி 20-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். இதைத்...
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்தும், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தியும் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் வடசென்னை மாவட்ட...
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற காட்டமான விமர்சனத்தை பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து முதன்முதலாக கருத்து தெரிவித்தவர் அவருடன் கூட்டணியில் இருந்த சுஷில் குமார் மோடி. அன்று முதல் பிஹார் அமைச்சர்கள்...
பிஹார் மாநிலம் பாட்னாவில் இறந்த நபர்கள் தொடர்பான ரயில்வே உரிமை கோரல் நிதியில் பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற இறப்பு உரிமை கோரல் தொடர்பான வழக்கில், நஷ்டஈட்டு தொகையை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்தான் முடிவு செய்து உத்தரவிடுகிறது. இதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப்...
நடிகை ரன்யா ராவ் மீதான தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக அரசு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக‌ கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது...
திருமலை திருப்பதி தேவஸ்தான வருடாந்திர பட்ஜெட் ரூ.5,258.68 கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. ரூ.5,258.68 கோடியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அறங்காவலர்...
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சி ஊழியர்கள் அதை நேற்று இடித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த குணால் கம்ரா அரசியல் நையாண்டி கலைஞர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளராகவும் உள்ளார். கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குணால் கம்ரா, மாநில துணை முதல்வரும் சிவசேனா (ஷிண்டே) தலைவருமான...
கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குறி வைத்து ஹனி டிராப் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜண்ணா புகார் தெரிவித்தது தொடர்பான மனுவை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுள் ளது. இதனால் அம்மாநில அரசி யலில் பரபரப்புஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பேசும்போது, “சில எம்எல்ஏ-க்கள் தங்களது அரசி யல் எதிரிகளை பழி வாங்கு வதற்காக பெண்களை வைத்து பாலியல் வழக்கில் சிக்க வைக்க...
பிஹாரில் முதல்வர் நிதிஷ் தலை மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. நிதிஷுக்கு பிஹார் முஸ்லிம் கள் கணிசமான எண்ணிக்கை யில் ஆதரவளித்தனர். ஆனால், வக்பு சட்டத் திருத்த மசோ தாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக் கிய ஜனதா தளம் கட்சி ஆதர வளித்ததால், தற்போது முஸ்லிம் கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இப்தார் விருந் தில் பங்கேற்க முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார்....