Google search engine
ஆரோக்கியமாக இருக்கவும், மாசற்ற சூழலை உருவாக்கவும், இளைஞர்கள் சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் ஃபிட் இந்தியா இயக்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார். இதில் சைக்கிள் ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் ஞாயிற்று கிழமைகளில் சைக்கிள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி...
மணிப்​பூரில் பாது​காப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்​டை​யில் குகி மற்றும் மைதேயி தீவிரவாத அமைப்பு​களைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர். மணிப்​பூரில் மைதேயி, குகி இனத்​தவர்​களுக்கு இடையில் கடந்த 2023 மே மாதத்​தில் இருந்து நடைபெற்று வரும் மோதலில் பலர் கொல்​லப்​பட்​டனர். பலரை காணவில்லை. பலர் மாநிலத்தை விட்டு வெளி​யேறினர். இந்நிலை​யில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த வாரம் அமல்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து அங்கு...
 திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதியநிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளன. திருப்​ப​தி​யில் அலிபிரி மலைப்​பாதை​யில் தற்போது சிறுத்​தைகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த தேவஸ்​தானம், பக்தர்​களுக்கு புதிய நிபந்​தனைகளை விதித்​துள் ளது. அதன்​படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரைமலையேறி செல்​லும் பக்தர்​களுக்கு எவ்வித நிபந்​தனை​யும் இல்லை. மதியம் 2 மணிக்கு பிறகு, 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்​டம், கூட்​டமாக...
கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக ரூ.1,646 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. டிஜிட்டல் நாணயம் என்றழைக்கப்படும் கிரிப்டோகரன்சி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இதை மையமாக வைத்து குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ் கும்பானி (38) கடந்த 2016-ம் ஆண்டில் பிட்கனெக்ட் என்ற பெயரில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தார். இதில் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். புதிய...
மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்த ஆன்மிக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டெல்லி...
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்...
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் இந்தியாவுக்கு சில விஷயங்களில் வெற்றி கிடைத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘‘நான் பாராட்டியது சரிதான். கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது’’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், அவ்வப்போது மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டி கருத்து வெளியிடுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இவர் மீது அதிருப்தியும் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை...
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. தேசத்தில் நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து வரும் அரசு நிறுவனமான தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் இதை உறுதி செய்துள்ளது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. பூமியில் 5...
அமெரிக்க தயாரிப்பான எப்-35 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும்போது, அதன் திறன் பல மடங்கு அதிகரிக்கும். பிரதமர் மோடி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் விற்கப்படும் என அறிவித்தார். இந்த போர் விமானம் சூப்பர்சோனிக் வேகத்தில் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் பறக்கும் திறன் உடையது. இந்த விமானத்தின் விமானி...
மணிப்பூரில் கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அந்த இளைஞர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில வைரலானது. ஏகே 74 மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம் சீரிஸ் துப்பாக்கிகளை அந்த இளைஞர்கள் வைத்திருந்தனர். மேலும் 'குகி மண்' என்ற தலைப்பில் இந்த வீடியோ...