பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலக தூய்மை பணியாளர்களான நாகராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்தோம். ஜிஎஸ்டி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வியாபாரிகளை குறிவைத்து அதிகாரி போல பேசி ரூ.5 லட்சம் வாங்கியுள்ளனர்....
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் ரூ.11,000 கோடி முதலீடு – உ.பி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பலன்
admin - 0
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஜப்பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்கியோவுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு...
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை...
பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். காயம் அடைந்த ஆர்த்தி, வாராணசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்த்தியை ஒருதலையாக காதலித்த தீன பந்து என்பவர்...
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்தில் சர்ச்சை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கண்டனம்
admin - 0
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடத்தில், நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் அந்தப்...
கேரளாவில் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவகேரளா குடிமக்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பிரச்சாரத்தைப் போன்ற ஒரு பெரிய அளவிலான (வீடு வீடாக) ஆய்வுக்கு பொது நிதியையும், அரசு இயந்திரங்களையும் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்ப்பை...
மேற்கு வங்க இறுதிப் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்க மாவட்ட நீதிசார் அலுவலர்களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.
மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையற்ற நிலையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்தியது. கூடுதலாக ஜார்க்கண்ட், ஒடிசா நீதிசார் அலுவலர்களை...
டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப்புக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘பாரத் மண்டபத்தில் தேசிய அவமானம்' என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் உட்பட 277 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இளைஞர் காங்கிரஸார் நடத்திய சட்டையில்லாத போராட்டம் நாட்டின் மாண்புக்கு செய்யப்பட்ட துரோகம்.
அதுவும்...
அவிமுக்தேஷ்வர் மீது போக்ஸோ வழக்கு பதிவு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்
admin - 0
உத்தராகண்டின் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த். பிரயாக் ராஜ் மகரமேளா புனித நீராடலின் போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் உ.பி. போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அவரது ஆதரவாளர் படுகாயமடையக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினார். பலன் இல்லாத நிலையில் மகரமேளாவை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மகரமேளாவில் தனது முகாமில் சீடர்களாக இருந்த சிறுவர்களில் மூவரை...
60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
admin - 0
திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது நெய்யில் கலப்படம் என்று தெரிந்தே வாங்கியதாக தீவிர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன் மீது...










