Google search engine
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. அவரது மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 பிறந்தநாளையொட்டி துவாரகாதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கான பாதயாத்திரையை குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கினார். அவரது 170 கி.மீ. நடைப் பயணம் 8 நாட்களுக்குப் பிறகு நேற்று நிறைவடைந்தது. அப்போது தன்னுடன் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆனந்த் நன்றி...
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து, குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சில ஊழியர்களை கழுத்தில் சங்கிலியால் கட்டி இழுத்து, நாய்களை போன்று நடக்க வைத்திருப்பது...
ராம நவமி தினத்தில் அயோத்தி பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உத்தர பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. தற்போது நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பால ராமரை வழிபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை...
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,000 கிராமங்களில் விதவைகளுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 27,000 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. கோல்காபூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வத் கிராம பஞ்சாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கணவன் இறந்தால் பெண்களின் தாலி, மெட்டி போன்றவற்றை அகற்றுவது, குங்குமத்தை நீக்குவது, வளையல்களை உடைப்பது போன்ற சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தத்தை பல கிராமங்கள் பின்பற்றத் தொடங்கின....
வரும் அக்​டோபர் முதல் 2027 ஏப்​ரல் வரை, பிஹார், மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, உத்தர பிரதேசம், உத்​த​ராகண்ட், குஜ​ராத் மற்​றும் இமாச்​சல் ஆகிய 7 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது. இச்​சூழலில் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேறிய வக்பு சட்ட திருத்த மசோதா சட்​ட​மாகி உள்​ளது. இதன் பலன் பாஜக.வுக்கு கிடைக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தற்​போது திடீரென வக்பு சட்ட திருத்த மசோ​தாவை மத்​தி​யில் உள்ள பாஜக...
குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். ஒரு பைலட் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவர் காயங்களுடன், குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு பைலட் ஆன சித்தார்த்...
குழந்தைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரும் மனுவை விசரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. சமூக ஊடகத்தை பயன்படுத்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்க கோரி ஜெப் அறக்கட்டளை சார்பில் மோகினி பிரியா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், வயது சரிபார்ப்பு முறை, பயோமெட்ரிக் போன்ற முறைகளை பயன்படுத்த மத்திய அரசு...
வக்பு மசோதா மீதான விவாதத்தில் வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி பங்கேற்காதது குறித்து கேரள முஸ்லிம் பத்திரிகையின் தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் அண்மையில் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் நடைபெற்ற இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் வயநாடு தொகுதியான பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜெம்-இய்யாத்துல் உலமா நடத்தி வரும் மலையாளப் பத்திரிகையான சுப்ரபாதத்தின் தலையங்கத்தில்...
17 மணி நேர விவாதத்துக்குப் பின் மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் தாக்கல் செய்தார். மக்களவையில்...
ஆந்திர தலைமைச் செயலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் மாநில தலைமைச் செயலகம் உள்ளது. இதன் 2-வது பிளாக் பகுதியில் பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 2-வது பிளாக்கில் துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா மற்றும்...