உத்தர பிரதேசத்தில் பாஜக பிரமுகர் குல்பம் சிங் யாதவை, மர்ம நபர்கள் 3 பேர் விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகர் அருகேயுள்ள தப்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ் (60). பாஜக பிரமுகரான இவர் , மேற்கு உத்தர பிரதேசத்தின் பாஜக மண்டல துணைத் தலைவராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு குன்னார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இவர் அப்போதைய...
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 400 சிறுமிகள் லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலா நகரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் பேசியதாவது:
கோட்டயம் மாவட்டம், மீனாச்சல் வட்டத்துக்குட்பட்ட சுமார் 400 சிறுமிகள் லவ் ஜிகாத் வலையில் (மத மாற்றம் செய்து திருமணம் செய்தல்) சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் மட்டுமே...
இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு ‘மல்ஹர்’ சான்றிதழ்: மகாராஷ்டிர அமைச்சர் அறிமுகம்
admin - 0
மகாராஷ்டிர மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராணே கூறியதாவது: மகாராஷ்டிராவில் உள்ள இந்து சமுதாயத்தினருக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்துக்களால் நடத்தப்படும் சரியான ஆட்டிறைச்சி கடைகளை அடையாளம் காண ‘மல்ஹர்’ சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இறைச்சியில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்யவும் இது உதவும்.
இந்துக்கள் மல்ஹர்...
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனை தெரிவிக்கலாம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
admin - 0
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தனர். இதன்மூலம் போலி வாக்காளர்கள் மற்றும்...
இந்துக்களால் வெற்றி பெற்றேன்; முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை: அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கருத்து
admin - 0
இந்துக்களால் வென்றேன், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மதக்கலவரங்கள் அதிகமாக நடந்த நகரங்களில் முக்கியமானது அலிகர். மத்திய அரசின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. இந்நகரில் முஸ்லிம்கள் சுமார் 40 சதவீதம் உள்ளனர்.
இந்நிலையில் அலிகர் பல்கலையில் ஹோலி கொண்டாடுவதில் எழுந்த சர்ச்சை குறித்து அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அவர்...
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்: ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் சர்ச்சை
admin - 0
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பாரத்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சி நடைபெற்றபோது சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு கிராமத்தின் தலைவர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக மாமன்னர் சிவாஜி விசாரணை நடத்தினார். அப்போது...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்ட் லூயிஸில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் மொரீஷியஸ் தீவு நாடு அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1715-ம் ஆண்டில் மொரீஷியஸை, பிரான்ஸ் ஆக்கிரமித்தது. கடந்த 1803 மற்றும் 1815-ம்...
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தர்மேந்திர பிரதான் மறுப்பு; தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்தார்
admin - 0
புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக மற்றும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது: பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக...
ஹோலி பண்டிகை நாளில் வீட்டிலேயே இருக்குமாறு முஸ்லிம்களை பாஜக எம்எல்ஏ ஒருவர் கேட்டுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல். பாஜகவை சேர்ந்த இவர் முஸ்லிம்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. இதில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை வருகிறது. அன்று இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும். தங்கள்...
மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடும்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது மோவ். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐசிசி சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை இளைஞர்கள் கொண்டாடினர். இவர்கள் ஜமா மசூதி வழியாக ஊர்வலமாக செல்லும்போது அவர்கள் மீது...










