மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம், ஜைட் கிராமத்தில் உள்ள மருந்து உற்பத்தி பிரிவில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.88.92 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்...
இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் என்ற இடத்தில் இருந்து துர்காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 29 பேர் இருந்தனர்.
இந்நிலையில் சர்காகாட் அருகில் இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் பல்வேறு...
கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததற்கான 100% ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில்...
சத்தீஸ்கரில் 66 நக்சலைட்கள் சரண்: பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் மறுவாழ்வுக்கு திரும்பினர்
admin - 0
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நக்சல் வேட்டைக்கு என மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில...
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் சேமிப்பு: ஐஆர்எஸ் அதிகாரியின் உயில் ஒப்படைப்பு
admin - 0
ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ், ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவர். அவர் தனது இறப்புக்கு பிறகு தனது வீடு மற்றும் வங்கி சேமிப்பை ஏழுமலையானுக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் உயிலின் நகலை அவரது உறவினர்கள் நேற்று திருமலைக்கு வந்து,...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
admin - 0
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது....
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக, 40-க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன.
அவற்றின்...
பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சி இந்துத்துவாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வரும் 2027 உ.பி. தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போதைய ஷ்ராவண மாதத்தில் சமாஜ்வாதி சார்பில் காவடி யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக கேதார்நாத்தில் இருப்பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்பதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்ளார். இந்த கோயில், அகிலேஷின்...
பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்
admin - 0
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தனி கமிட்டி...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர், விமான விபத்து தொடர்பான விவகாரங்களை மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அதோடு பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...



