2 ஆண்டுகளில் 7 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வக்பு சட்ட திருத்தத்தின் பலன் பாஜக.வுக்கு கிடைக்குமா?
admin - 0
வரும் அக்டோபர் முதல் 2027 ஏப்ரல் வரை, பிஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், குஜராத் மற்றும் இமாச்சல் ஆகிய 7 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய வக்பு சட்ட திருத்த மசோதா சட்டமாகி உள்ளது.
இதன் பலன் பாஜக.வுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது திடீரென வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்தியில் உள்ள பாஜக...
“பேபி, நீங்கள் செய்த சத்தியம்…” – விமானப் படை பைலட் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்
admin - 0
குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
ஒரு பைலட் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவர் காயங்களுடன், குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு பைலட் ஆன சித்தார்த்...
குழந்தைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரும் மனுவை விசரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
சமூக ஊடகத்தை பயன்படுத்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்க கோரி ஜெப் அறக்கட்டளை சார்பில் மோகினி பிரியா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், வயது சரிபார்ப்பு முறை, பயோமெட்ரிக் போன்ற முறைகளை பயன்படுத்த மத்திய அரசு...
வக்பு மசோதா விவாதத்தில் பிரியங்கா காந்தி ஏன் பங்கேற்கவில்லை? – கேரள முஸ்லிம் பத்திரிகை கேள்வி
admin - 0
வக்பு மசோதா மீதான விவாதத்தில் வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி பங்கேற்காதது குறித்து கேரள முஸ்லிம் பத்திரிகையின் தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் அண்மையில் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் நடைபெற்ற இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் வயநாடு தொகுதியான பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜெம்-இய்யாத்துல் உலமா நடத்தி வரும் மலையாளப் பத்திரிகையான சுப்ரபாதத்தின் தலையங்கத்தில்...
17 மணி நேர விவாதத்துக்குப் பின் மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் தாக்கல் செய்தார்.
மக்களவையில்...
ஆந்திர தலைமைச் செயலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் மாநில தலைமைச் செயலகம் உள்ளது. இதன் 2-வது பிளாக் பகுதியில் பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
2-வது பிளாக்கில் துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா மற்றும்...
திருச்சி சிவா இந்தி பாடல்களை நன்றாக பாடுவார்: நிர்மலா சீதாராமன் பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை
admin - 0
முகம்மது ரஃபி பாடல்களை பாடும் திருச்சி சிவாவுக்கு பாஜகவின் இந்தி முழக்கம் வராதது எப்படி என அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது.
மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது ‘சப்கே சாத் சப்கா விகாஸ் (அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி)’ எனும் பாஜகவின் இந்தி...
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமரை வரவேற்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் உள்ள பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெர்தா, சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸா மற்றும்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்பார்த்ததை விட மத்திய அரசுக்கு ஆதரவு வாக்குகள் அதிகமாகின. இதன் பின்னணியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் இரு வேறு நிலைப்பாடு இருந்தது தெரிய வருகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வக்பு மசோதா 288 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது. இதன் மறுநாளான நேற்று இந்த மசோதா மாநிலங்களவையிலும் பிரச்சினையின்றி நிறைவேற்றப்பட்டது. நள்ளிரவு வரை நீண்ட விவாதத்திற்கு பின் எம்பிக்களுக்கான வாக்கெடுப்பு 2.30 மணிக்கு துவங்கியது....
உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி: சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம்
admin - 0
அதிபர்கள் ட்ரம்ப், புதின், ஜெலன்ஸ்கி என உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா - சிலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட் 5 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தார். டெல்லி, ஆக்ரா, மும்பை, பெங்களூரு ஆகிய...










