Google search engine
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது: தமிழ் நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றை களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவ தயாராக உள்ளேன். மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமெனில், நமக்கு பலமான தலைவர் தேவை. அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வு மக்களுக்கு வரும். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு நமக்கும், நமது நாட்டுக்கும் கிடைத்துள்ள பலமான நாயகனே...
பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​தியா தாக்​குதல் நடத்​திய போது, திரு​மணங்​களில் வீடியோ எடுக்க பயன்​படும் ட்ரோன்​கள், பயனற்ற ஆயுதங்​கள், திறனற்ற ஏவு​கணை​களை இந்​தியா மீது பாகிஸ்​தான் ஏவிய​தாக சமூக வலை​தளங்களும் உருது நாளிதழ்​களும் விமர்​சனம் செய்​துள்​ளன. பாகிஸ்​தான் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​திய போது, பாகிஸ்​தான் பதி​லுக்கு ஏவிய திறனற்ற ஏவு​கணை​கள் இலக்கை தாக்​கு​வதற்கு முன்​பாகவே வெடித்து சிதறி​யுள்​ளன. இது​போல், பயனற்ற ஆயுதங்​களை வைத்து இந்​தி​யா​வுடன் திறமை​யாகப் போர் புரிவ​தாக...
‘‘இந்​திய மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​கு, 10 சேட்​டிலைட்​கள் 24 மணி நேர​மும் பாகிஸ்​தானை கண்​காணித்து வரு​கின்​றன’’ என்று இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை தலை​வர் வி.​நா​ராயணன் உறு​தி​யாக கூறி​னார். திரிபுரா மாநிலம் அகர்​தலா​வில் உள்ள மத்​திய வேளாண் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்​றது. அதில் சிறப்பு விருந்​தின​ராக இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் பங்​கேற்​றார். அப்​போது மாணவர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது:...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது என டிஆர்டிஓ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எந்த ஒரு நாடும் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாடு தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொண்டால், அது நவீன தொழில்நுட்பங்களையும் மேம்படுத்திக் கொள்ளும். மேலும் அந்த முறைகள்...
அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன்....
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை...
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது. எல்லை பகுதியை ஒட்டி உள்ள...
உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது...
ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே​வில் உள்ள டிஆர்​டிஓ அமைப்​பின் பொறி​யியல் பிரிவு தலை​வர் டலோலி கூறிய​தாவது: போர்க்​களம் மற்​றும் ராணுவ நடவடிக்​கை​களின்​போது வீரர்​களின் உயி​ரிழப்பை தடுக்க ரோபோக்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதற்​காக மனிதர்​களை போன்ற ரோபோ வீரர்​களை தயார் செய்​யும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறோம். கடந்த 4 ஆண்​டு​களாக மாதிரி ரோபோக்​களை தயார் செய்​திருக்​கிறோம். இந்த ரோபோக்​கள் கடின​மான மலைப்​பகு​தி​களில் எளி​தாக ஏறிச் செல்​லும். நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்று...