ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் செல்போனில் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் சென்ற இவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது ரீல்ஸ் எடுத்துள்ளார். ஆபத்தான முறையில் அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார். சிறிது பிசகினாலும் அவர்...
பிரிட்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான எம்பர், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத எரி சக்தி உற்பத்தி குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் 215 நாடுகளின் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு சர்வதேச அளவிலான மின் உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும்...
குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கு விதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா...
மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துக்களுக்கு தாகத்தை தணிக்க முஸ்லிம்கள் குளிர்பானம் வழங்கியது மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அமைந்தது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் கடும் வெயிலிலும் ஊர்வலமாக சென்றனர்.
அந்த வகையில் கிதர்பூரிலிருந்து பில்கானா வரை ஊர்வலமாக சென்றவர்களுக்கு அப்பகுதியில் இருந்த முஸ்லிம்கள் மாம்பழ ஜூஸ், சர்பத், குடிநீர் உள்ளிட்டவற்றை...
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருக்கு, ஸ்ட்ரோமங்டேலுங் என்ற படை இருந்தது. இது ஹிட்லரின் ரகசிய படையாக செயல்பட்டது. ஹிட்லர் காலத்தில் நடந்த சம்பவங்கள் தற்போது உ.பி.யில் நடைபெற்று வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சென்றுவிட்டு லக்னோ திரும்பும்போதெல்லாம் கொலை நடைபெறுகிறது.
இதன் பின்னணியில் கோரக்பூரை சேர்ந்த ரகசிய படை இருக்கிறது. இது பாஜகவின் ரகசிய படை ஆகும். கர்னிசேனா போன்ற...
ஆந்திராவில் சாலை விபத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாணதுர்கம் பகுதியை சேர்ந்தவர் ரமா (50). ஐஏஎஸ் அதிகாரியான இவர் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பீலேருவில் தங்கி உள்ளார்.
ராயசோட்டி மாவட்ட இணை ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ரமா, நேற்று மனுநீதி நாள் என்பதால் பொதுமக்களிடம் இருந்து...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் செயல்படுகிறது. தற்போது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 50 போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். வரும் 2037-ம் ஆண்டுக்குள் புதிதாக 25 போர்க்கப்பல்கள் கிழக்கு பிராந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
இதை கருத்தில் கொண்டு...
பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கி கணக்குகளைஜம்மு-காஷ்மீர் காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ நகர் காவல் துறை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறியதாவது: வாடிக்கையாளர்களிடம் கமிஷன் தருவதாக கூறி அவர்களின் வங்கி கணக்குகளை பணமோசடிக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 7,200 வங்கி கணக்குகள் சைபர் குற்றங்கள் மற்றும் பண மோசடிக்கு...
இந்தியாவில் விண்வெளி துறையில் ஈடுபட முதல் நிறுவனமாக ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், விண்வெளியில் ஏவக் கூடிய ராக்கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டுக்கு இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக, விக்ரம் -1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ராக்கெட் இன்ஜின் 3 நிலைகளை கொண்டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்றிகரமாக...
ஆந்திர மாநில தலைநகருக்காக மத்திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது.
அப்போது ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகராக இருக்கும் என்றும், புதிய தலைநகரை உருவாக்கும் வரை அல்லது 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவின் தலைநகராகவும் ஹைதராபாத் இருக்கும் என்றும் மாநில பிரிவினை மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
இருந்தாலும், மாநிலம் பிரிந்த...










