தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெட்ரோல் பங்க் உட்பட வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். முக்கிய சுற்றுலா தலங்கள் உட்பட பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குலை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த...
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில் மறுநாள் காலை 9.30 மணிக்கு பஹல்காமில் இருந்து புறப்பட்டு, சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகருக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு இவர்கள் பஹல்காமை விட்டு வெளியேறியதன் மூலம்...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆடில் குரி, ஆசிப் ஷேக், சுலைமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய 4 தீவிரவாதிகளின் படத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் ஆடில் குரி என்பவர் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஆசிப் ஷேக் காஷ்மீரின் ஷோபூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது....
இந்நிலையில் தேவை அதிகரிப்பு அடிப்படையில் விமான கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் `எக்ஸ்' தளத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில், “பஹல்காம்...
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்தனமான, கொடூரமான செயல். இது கடும் கண்டனத்துக்குரியது. நமது பகுதியை நம்பி சுற்றுலா வந்த பயணிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளின்...
கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரில், ''எனது தந்தையை எனது தாய் பல்லவி (64), எனது சகோதரி கீர்த்தி (31) ஆகியோர் கொலை செய்திருக்கலாம். சொத்து பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவரும் அவரை கொல்ல சதி தீட்டினர்'' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எச்.எஸ்.ஆர்.லே...
நாடாளுமன்றமே உயர்வானது; எம்.பி.க்களே எஜமானர்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து
admin - 0
அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. எம்பிக்களே எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜனநாயக நாட்டில் குடிமகனே உயர்வானவர். ஒரு தேசமும், ஜனநாயகமும் மக்களாலேயே கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனிடமும் ஜனநாயகத்தின் ஆன்மா வாழ்கிறது. ஜனநாயக நாட்டில் அனைத்து...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை குறிவைத்து " நேஷனல் ஹெரால்ட் கொள்ளை" என்று எழுதப்பட்ட பையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வரஜால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதற்கு, காங்கிரஸ்...
மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான், பிஹார் முதல்வர் பதவிக்கு மீண்டும் குறிவைத்துள்ளார்.
பிஹாரில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய சிராக் பாஸ்வான், பிஹார் அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும், தேசிய அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார்.
எல்ஜேபி இளைஞர் அணி மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவில் நடைபெற்றது. அதில் சிராக் பாஸ்வான்...
இந்தியாவின் வளர்ச்சியில் இணைய வேண்டும்: உலகளாவிய நிறுவன சிஇஓ-க்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
admin - 0
இந்தியாவின் வளர்ச்சியில் இணைய வேண்டும் என உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். டூரிங் நிறுவனத்தின் சிஇஓ ஜொனாதன் சித்தார்த் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் எனவும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விவரித்தார்.
டேட்டாரோபோட் நிறுவனத்தின்...










