Google search engine
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஐஏ...
காஷ்மீரின் பஹல்​காமில் தாக்கு தல் நடத்திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூரில் உள்ள காஷ்மீர் ஆதர​வாளர்​கள் (காஷ்மீரி ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் - ஓஜிடபிள்​யூ) உதவி செய்​துள்​ளதை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர். தீவிர​வா​தி​கள் தங்​கு​வதற்கு இடம், உணவு போன்ற வசதி​களை செய்து கொடுப்​பவர்​களை ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் என்று அழைக்​கின்​றனர். இதுகுறித்து புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூர் ஆதர​வாளர்​கள் 15 பேர் உதவியது எலக்ட்​ரானிக் கருவி​களை...
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததாக அசாம் (14), மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம், தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும்...
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி கூறியிருந்தற்கு பதிலடி கொடுத்துள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் மதம் என்ன என கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடுஞ்செயலை செய்த நீங்கள்...
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் வெளியிட்ட உத்தரவில், “ பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாசகார சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை தைப்பதற்கும், விற்பதற்கும்,...
மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில எல்லைகள் சந்திக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு ‘‘தீர்க்கமான நடவடிக்கை’’ என பெயிரிடப்பட்டுள்ளது. இதில் சரணடைவது அல்லது இறப்பது என்ற இரு வழிகள் மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய...
பஹல்காம் தாக்குதலை கண்டித்து டெல்லியில் நேற்று சந்தைகள் மூடப்படிருந்தன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் வர்த்தகர்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கான் மார்க்கெட் வியாபாரிகள் பேரணி நடத்தினர், இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி...
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவி செய்து துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான விமானப்படை வீரர் தாகே ஹைல்யாங்குக்கு மாநில அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் சுபான்சிரி மாவட்டம் தஜாங் கிராமத்தை சேர்ந்தவர் தாகே ஹைல்யாங். விமானப்படையில் கார்போரல் அந்தஸ்தில் பணியாற்றும் இவர், விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுப் பயணம்...
பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய 2 தீவிர​வா​தி​களின் வீடு​களை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் தீவிர​வாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. தாக்​குதல் நடத்​தப்​பட்ட பிறகு தீவிர​வா​தி​கள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடு​களில் பாது​காப்​புப் படை​யினர் சோதனை நடத்​தினர். அனந்​த​நாக் பகு​தி​யில் உள்ள அடில் வீட்​டிலும், அவந்​தி​போரா...
காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன்...