கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய கப்பல் பரிசோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன், வானில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பல் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் அதேபோன்ற ஆகாய கப்பலை ஆக்ராவை சேர்ந்த ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டி) உருவாக்கியது. இந்த...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் தெரிவித்துள்ளதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் தலைமையிடமிருந்து தீர்க்கமான பதிலடியை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர்...
இந்தியாவின் ராணுவ கண்டோன்மென்ட், ஏர்பேஸ் உள்ளிட்ட ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய 2 பேர் கைது
admin - 0
எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் இந்திய ராணுவத்தின் சில மிக முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதன் புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் இந்திய ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள்,...
ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், இந்து தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் மதச்சார்பற்ற அரசியல் எவ்வாறு வடிவம் பெற...
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர்...
தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும் அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து முதல்வர் ரேகா...
சமூக வலைதளத்தில் நாட்டுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பெண் மருத்துவர் மீது வழக்கு: மங்களூரு போலீஸார் நடவடிக்கை
admin - 0
கர்நாடகா மங்களூருவை சேர்ந்த பெண் மருத்துவர் நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனை அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 34 வயதான பெண் மருத்துவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அண்மையில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல்...
புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நமது நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆராய்ச்சித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், ஆராய்ச்சிகளில் அவர் புதிய உயரத்தையும், மைல்கற்களையும் எட்டி வருகின்றனர். நாட்டின்...
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, சிந்து நதி நீர்...
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்....










