ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல் ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவீந்திர குமார் என்பவர் கரவுலி மாவட்டம் தொடாபிம் நகருக்கு அருகே சுரங்கம் நடத்தி வருகிறார்.
இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுபப் போவதாகவும் பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ ஜெய்கிரிஷ் படேல் (37)...
வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த செயலில் தற்போது இறுதி மற்றும் சோதனை கட்டத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பிஹார் தேர்தலுக்கு முன் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “வாக்காளர் வாக்குப்பதிவு செயலி, உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்...
பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்: சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகள் கட்ட திட்டம்
admin - 0
ஜம்மு காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து...
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தில் கத்திரி வெயில் தொடங்கிய அன்றே அதிகாலை முதல் இரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இந்த மழை பல மாவட்டங்களில்...
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு தங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர்...
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு...
ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா...
ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்
admin - 0
ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி, உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது....
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.
‘‘பாகிஸ்தான் படைகளின் தயார் நிலை குறித்து...
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது.
கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடை திறப்பின்போது இந்திய ராணுவத்தினர் தெய்வீக...










