திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி.
இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார் கார்த்தி. அப்போது அங்கிருந்த பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “மகன் பிறந்த பிறகு திருப்பதிக்கு வரவே இல்லை. ஆகையால் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தது நன்றாக இருந்தது. அடுத்து ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’...
தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். இவர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். இப்படத்துக்கு ‘ஹவுஸ் மேட்ஸ்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா ,...
பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே என்று ‘காதல் என்பது பொதுவுடைமை’ இசை வெளியீட்டு விழாவில் ரோகிணி பேசினார்.
வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த...
மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன், கடந்த 2022-ம் ஆண்டு, நடிகை ஒருவரைக் காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், “சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் தன்னை அவமதித்தும் டேக் செய்தும் தனது பெயரில் ஆடியோ குறிப்புகளையும் சனல் குமார் சசிதரன்...
இந்த ஆண்டு ஜனவரியில் 26 படங்கள் வெளியாயின. இதில், ‘மத கஜ ராஜா’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘குடும்பஸ்தன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த மாதம் 6-ம் தேதி அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி' வெளியானது. 7-ம் தேதி தெலுங்கு படமான ‘தண்டேல்’ வெளியானது. வரும் 14-ம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ்...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 4 நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தன்மைகளைத்...
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது.
படம்பற்றி நடிகர் பவிஷ் நாராயண் கூறியதாவது: நான்...
உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிப்ரவரி 3-ம் தேதி இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கிராமி விருது விழா எப்போதுமே புகழுக்கும் சர்ச்சைக்கும் சேர்ந்தே பெயர் பெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் உடைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கிராமி விழாவுக்கு வருகைத் தந்திருந்த பிரபல ராப்...
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக தற்போது போர்க்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் திறமையான 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்....
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு கதையை எழுத ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் ‘மர்மயோகி’!
அந்த காலத்து ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களான டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas...










