அரசன் கோட்டை என்ற ஊரில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா), மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதியஉடற்கல்வி ஆசிரியராகப் பணியில் இணைகிறார் சரவணன் (சுந்தர்.சி). இவருடன் சுஜிதாவும் மற்றொரு உடற்கல்வி...
டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம்...
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதில், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான்...
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட் சினிமா நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “பஹல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள்...
‘மகாபாரதம்’ படத்துக்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்கவுள்ளார் ஆமிர்கான்.
இந்தியாவில் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள் என்னவென்றால் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்குவது தான் என்று ஆமிர்கான் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது அதற்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்க இருப்பதாக மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆமிர்கான். அப்பேட்டியில் ‘மகாபாரதம்’ குறித்து “எனக்கு இருக்கும்...
விஷ்ணு விஷால் - ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும்...
பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது...
தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது...
சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள்.
தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி - ஜி.வி.பிரகாஷ்...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. இதற்காக...










