திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அது நாளுக்கு நாள், வாரா வாரம் மோசமாகி வருகிறது. முன்பு நம்மிடையே விமர்சகர்கள் இருந்தனர். இப்போது நம்மிடம் இருப்பவர்கள் விமர்சகர்கள் அல்ல. அவர்களின் இலக்கு வேறு....
ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இயக்குநர் ராம் பேசும்போது, "நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வர...
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.
இந்தப் படம் 2013 -ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது.
ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் படமான இது புதிய கிளைமாக்ஸ்...
மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த ‘ஒரு நொடி’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஜென்ம நட்சத்திரம்’.
இதில் மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். கேஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமோகம் ஸ்டூடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஜூலை 18-ல் வெளியிடுகிறார்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமன்,...
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டியின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்...
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. இவர், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் மகேஷ்பாபு இருந்து வருகிறார். அவர் வரும் விளம்பரத்தைப் பார்த்து,...
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து அவர், இந்தியில் ஹிட்டான ‘கில்’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.
நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா, ராகவ் ஜூயல், தன்யா, ஆசிஷ் வித்தியார்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்த இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி...
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவர் இயக்கி 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’...
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு. தீரன், காளி, இரும்புத்திரை, தடம், கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன் என பல படங்களில் நடித்துள்ள இவர், ‘திருக்குறள்’ படத்தில் ‘தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்ததை மறக்க முடியாது என்கிறார்.
அவர் கூறும்போது, “தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தேன். சினிமா மீதான ஆர்வத்தால், அதைத்...
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
மலையாளத்தில் பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தருண் பாஸ்கர், இஷா ரெப்பா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘ஓம் சாந்தி...










