Google search engine
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக...
ஜெய் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கருடாராம், ஸ்ரீமன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், பிவி ஃபிரேம்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள்...
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம்...
இயக்குநர் எழில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கத்தில் விமல் நடித்த ‘தேசிங்குராஜா’ படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகம் ‘தேசிங்குராஜா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக ஜனா நடித்துள்ளார். பூஜிதா பொனாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர்...
இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜனா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் உருவாகிறது. இதில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து தனுஷின் புதிய தோற்றம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதில் விமானப்படை உடையை நடிகர் தனுஷ் அணிந்திருந்தார். இதனால் அவர் விமானப்படை அதிகாரியாக நடிப்பதாகக்...
ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், 'கயிலன்'. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளனர். பிடிகே பிலிம்ஸ் சார்பில் பி.டி. அரசகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கியுள்ளார். ஜூலை 25-ல் வெளியாகும் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா...
இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மைசா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இந்தப் படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ், ‘பான் இந்தியா’ படைப்பாகத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படம் பற்றி இயக்குநர் ரவீந்திர புள்ளே கூறும்போது, “இது 2 வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம்....
நடிகர் கவுதம் கார்த்திக் தனது பெயரை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டு நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார். இதை வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். வித்துசனன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான இதில், கவுதம் ராம் கார்த்திக், போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மரியா’. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர். மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தைத் தயாரித்து, ஹரி.கே.சுதன் இயக்கி இருக்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “பெண் ஒருவருக்கு அவரது இயல்புக்கு மாறான எண்ணம் தோன்றுகிறது. அதை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவரைச் சுற்றி இருக்கிறவர்களும் குடும்பத்தினரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்,...
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்...