சர்வதேச விழாக்களில் விருது வென்ற ‘மரியா’!

0
68

பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மரியா’. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர். மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தைத் தயாரித்து, ஹரி.கே.சுதன் இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “பெண் ஒருவருக்கு அவரது இயல்புக்கு மாறான எண்ணம் தோன்றுகிறது. அதை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவரைச் சுற்றி இருக்கிறவர்களும் குடும்பத்தினரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது இதன் கதை.

என் முதல் படம் உண்மையைப் பேச வேண்டும் என்பதற்காக இதை இயக்கி இருக்கிறேன். ஸ்டான்லி குப்ரிக் என்கிற ஹாலிவுட் இயக்குநரின் படம் தந்த பாதிப்பில் இதை இயக்கி உள்ளேன். மலேசியா, லண்டன், இத்தாலி உள்பட சில திரைப்பட விழாக்களில் இந்தப் படம் சிறந்த இயக்குநர், நடிகை, திரைக்கதைக்கு விருது பெற்றுள்ளது. சென்சாரில் இந்தப் படத்தின் சில காட்சிகளுக்குக் கட் கொடுத்தார்கள். பிறகு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here