நான் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். இப்போதும் அந்த நட்பு, அதே அன்போடு தொடர்கிறது. என்னை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள் என பெரும் வட்டம் அது.
அப்போது எனக்கு அறிமுகமானவர்களில் ஒருவர் வீரமணி. அவரை எங்கு, எப்போது முதன் முதலில் சந்தித்தேன் என்பது தெரியவில்லை. தென் மாவட்டத்துக்காரரான அவர் எம்.ஆர்.ராதாப்பாவின் நாடகக்குழுவில் இருந்திருக்கிறார். ராதாரவி அண்ணன் குடும்பத்துக்கு மிக வேண்டியவர்.
என் சகோதரி...
தான் மேடையில் பேசிய விவகாரத்துக்கு த்ரிஷா எதிர்வினையாற்றிய நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நான் பேசியது உண்மையிலேயே தவறிதான் நடந்தது. நான் மேடையில் விஜய் குறித்தோ அஜித் குறித்தோ பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு ஒரு புகைப்படம் வந்தது.
அதை பார்த்ததும் உண்மையிலேயே நான் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே...
பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர், ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். இப்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள கிம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைக்க ஞாயிற்றுக்கிழமை வந்தார். அவரைப்பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அவர்கள் மருத்துவமனைக்குள்ளும் புகுந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதுகாவலர்கள், அவர்களிடம் இருந்து ஜூனியர் என்டிஆரை மீட்டு அழைத்துச் சென்றனர். ரசிகர்களைக் கட்டுப் படுத்த...
பரத் நடித்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘காளிதாஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இதன் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில் இதையும் இயக்கியுள்ளார்.
இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் ஃபைவ் ஸ்டார் கே.செந்தில் மற்றும் டாக்டர்...
நடன இயக்குநர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம், ‘செவல காள’. விங்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குநர் பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஆக் ஷன் படமான இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், காமெடி காட்சிகளை இன்னும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு நினைத்தது. இதையடுத்து இப்போது தனியாக...
சத்யா சிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம் ‘அறிவு’. மூவிட்ரோன் நிறுவனம் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் ஐ. எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்கிறார்.
பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு இடுக்கி, தேனி...
இன்று நடைபெறவிருந்த ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று (மார்ச்.9) மதியம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்கு வரவிருந்த மறுதணிக்கை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் புதிய தேதி விரைவில் தெரியவரும் எனத் தெரிகிறது....
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர்.
சமீபத்தில் விஜய்யின்...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு...
சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.
அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள்...










