கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம்...
இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.
இவர், ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் தர்ஷன் குமார்,பல்லவி ஜோஷி , சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் , சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர்....
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், தமிழில் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகை ஒருவர் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இது போலியான செய்தி என்று கூறப்பட்ட நிலையில். இதுபற்றி சஞ்சய் தத்திடம் கேட்டபோது, அது உண்மைதான் என்றார்.
மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் (62) என்ற பெண், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை. நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான்...
“நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – நெல்லை ஐடி ஊழியர் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்
admin - 0
நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரையும் இணைத்துள்ளார்.
நடந்தது என்ன? - தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின்...
தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை...
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த 2022-ம் ஆண்டு முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கன்னையா லால் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ என்ற...
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இதை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் மூலம் சதீஷ்குமார் தயாரித்து நடிக்கிறார். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார்.
பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்திசாவ்லா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர்...
நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில்...
‘தோனி கபடி குழு', ‘கட்சிக்காரன் ' படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில்...
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி லாங் சண்டைக்...





