கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ஆம்...
இந்த சீசனின் மிக நியாயமற்ற ஒரு வெளியேற்றம் இந்த வாரம் நடந்தேறியுள்ளது. முதல் வாரத்தில் இருந்து எதுவுமே செய்யாமல் ‘மிக்சர்’ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உள்ளே இருக்க, டாஸ்க்குகளில் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வந்த பிரவீன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பிறகு இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இருந்தது. அதற்கு காரணம் பழைய போட்டியாளர்களை ‘கெஸ்ட்’ ஆக வரவழைத்து நடத்தப்பட்ட ‘ஆஹோ ஓஹோ ஹோட்டல்...
நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், “நிருபரின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர்...
திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இந்த படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள்...
கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்.
நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகம் இருந்த...
உடல் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட அநாகரிகமான கேள்விக்கு நடிகை கவுரி கிஷன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.06) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான...
துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.இப்படம் வரும் நவம்பர்...
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஆர்யன்’. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்கியுள்ள இப்படத்தை பிரவீன் கே இயக்கியுள்ளார். அக். 31-ல் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து, நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
படக்குழுவினர் கலந்துகொண்ட விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷ்ணு விஷால் கூறும்போது, “ஆர்யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு...
வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கிறார். தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில்,...
பிரபல இந்தி நடிகர் விக்கி கவுஷல் புராணக் கதையில் நடிக்கிறார். விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமரின் கதை திரைப் படமாகிறது. இப்படத்துக்கு ‘மகாவதார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘ஸ்திரீ 2’ படத்தை இயக்கிய அமர் கவுஷிக் இயக்குகிறார். இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இதில் விபிஎக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதம் செலவழிக்க இருக்கிறார்கள்.
இதற்கிடையே இதில் நடிப்பதற்காக விக்கி கவுஷலும் இயக்குநர் அமர் கவுஷிக்கும்...










