இதுவரை 8 ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், டாம் ஹாலண்ட் நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.
இப்போது அவர் நடிப்பில் 4-வது படம் உருவாகிறது. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்...
நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்
admin - 0
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், சரோஜாதேவி, ராஜேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர்,...
நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ரைட்’. ‘பிக் பாஸ்’ அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் அறிமுகமாகிறார்.
சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி...
நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதா சாகேப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது நாளை நடக்கும் 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட இருக்கிறது.
மோகன்லாலுக்கு விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், இந்த விருதை மலையாள சினிமாவுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இது பெருமையான தருணம். இதை நான் தனியாக அனுபவிக்க முடியாது. பார்வையாளர்களுடனும்,...
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’.
ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூணாறு அருகே நடந்து வந்தது. ஜீப் ஓட்டிச் செல்வது போன்ற காட்சியை நேற்று முன்தினம் படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் திடீரென கவிழ்ந்தது.
இதில் நடிகர்கள் ஜோஜுஜார்ஜ், தீபக் பரம்போல், ஸ்டன்ட் நடிகர் ஆகியோர் லேசான...
அறுபத்து மூன்று நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள். அவர்களில் மூத்தவர், காரைக்கால் அம்மையார். சிறந்த சிவபக்தரான அவரைப் பற்றிய புராணக்கதையை மையப்படுத்தி உருவான படம், ‘காரைக்கால் அம்மையார்’. சி.வி.ராமன் தனது கந்தன் கம்பெனி சார்பில் தயாரித்து இயக்கிய படம் இது. பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
வி.ஏ.செல்லப்பா, பி.சரஸ்வதி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், காளி என்.ரத்தினம், டி.எஸ்.ஜெயா, ‘பேபி’ கல்யாணி, சாந்தா தேவி, டி.எஸ்.துரைராஜ், கொளத்து மணி, மாதவன், ராமையா சாஸ்திரி,...
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டாம் என அவ்வமைப்பு அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம், ‘மீலாதுன் நபி’. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது இதன் பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ளார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆவணத் திரைப்படம் ஆகும்.
படம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான மில்லத் அகமது கூறும்போது, “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணாவர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய...
யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய படம், ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப் படத்தை பென்...
நடிகர் சித்தார்த், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘அன்அக்கஸ்டம்டு எர்த்’ (Unaccustomed Earth) என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.
இதில், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஃபிரீடா பிண்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமான்டிக் கதை, கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும்.
இந்திய-அமெரிக்கச் சமூகத்துக்குள் அமைக்கப்பட்ட...








