Google search engine
ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது. இதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை ‘ஹனுமன்’ பிரசாந்த் வர்மா இயக்குகிறார். பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸ் ஆவதை ஒட்டி, ‘ஜெய் ஹனுமான்’ படம் பற்றி...
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது”...
தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘கள்வனின் காதலி’ (1955), சாரங்கதாரா (1958), டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடித்த ‘மணிமேகலை’(1959) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தனது ரேவதி புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘மனிதனும் மிருகமும்’ (1953), ‘மேதாவிகள்’ (1955) ஆகிய படங்களையும்...
அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன என்று போஸ்ட் வெங்கட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு...
கலைமாமணி விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது என்று அனிருத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அனிருத், ”மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாடு...
தெலுங்கு சினிமாத் துறையின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக மிகப்பெரிய ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது. பவன் கல்யாணின் முந்தைய படமான ‘ஹரிஹர வீரமல்லு’ மிகப் பெரிய தோல்வியை தழுவிய சில நாட்களிலேயே வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். 1970களில் ஜப்பானின் டோக்யோ நகரத்தில் இயங்கி...
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் ‘அதிரா’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’, பவன் கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் ‘ஓஜி’ உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள டிவிவி தனய்யாவின் மகன் கல்யாண் தாசரி, இந்தப் படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார். தெலுங்கில் உருவாகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘ஹனுமன்’...
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு பிரம்மாண்ட கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான கவுதம் கார்த்திக், தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ என பல படங்களில் நடித்தார். இப்போது தனது பெயரை கவுதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ள அவர் நடிக்கும் படத்தை, கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்கிறார். இன்னும்...
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளார். குறைவான பணி நேரம், 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு தரப்புக்கும்...
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவருடைய மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில மாதங்களுக்கு முன், புகார் அளித்திருந்தார். அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி, முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இதை உன்னி...