Google search engine
கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘மவுனம்’. அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர் ரித்திக், சுமன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. அக். 20-ல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். “கரோனா...
‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’. இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மிஸ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் ரஜினி கிஷன் தயாரித்துள்ளார். ஊரை விட்டு ஓடிப்போகும்...
‘கோமாளி’, ‘பி.டி. சார்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்பட பல படங்களை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருபவர், ஐசரி கே கணேஷ். இப்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘கட்டா குஸ்தி 2’, ‘டயங்கரம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’...
ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசை அமைத்திருக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது: நமது வாகனங்களுக்கு பெட்ரோல்,...
கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். டொம்னிக் அருண் இயக்கிய இந்தப் படம், மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில், ஆக் ஷன் காட்சிகளும் பிளாஷ்பேக்கில் வரும் தொன்மக் கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால்...
‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்...
திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார். ஒளி என்​பது சினி​மா​வின் ஆன்​மா. அது வெறும் வெளிச்​சமல்ல; அது கதை சொல்​லும் மொழி. ஒளி எப்​படிப் பயன்​படுத்​தப்​படு​கிறது...
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹெச்ஆர்எக்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோவுக்கு வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘தப்பார்’ படத்தை இயக்கிய அஜித் பால் சிங் இதை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத த்ரில்லர் வெப் தொடரான இதில், பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அலயா எஃப், சிருஷ்டி வஸ்தவா, ரமா சர்மா, சபா ஆசாத் ஆகியோரும்...
தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், நான்...
நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், வெளிநாடுகளில் நடந்த ‘அயர்ன்மேன் டிரையத்லான் 70.3’ என்ற தடகளப் போட்டியை ஒரே வருடத்தில் 2 முறை முடித்த இந்திய நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார். இந்தக் கடினமானப் போட்டி, 70.3 மைல்களை (113...