என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றவும் முடியாது என்று தெருக்குரல் அறிவுக்கு பதில் அளிக்கும் விதமாக கானா பாடகர் மன்னர் முத்து பேசியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை முத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘சமீபத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தேன், மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றும் அளவுக்கு யாருக்கும் வேலையெல்லாம் இல்லை. எனக்கு எல்லா...
‘கட்டா குஸ்தி 2’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்​கும் படத்​தில் விஷ்ணு விஷால் நடிக்க இருந்​தார். இப்​படம் பட்​ஜெட் பிரச்​சினை காரண​மாகக் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன. இந்​நிலை​யில் அதை நடிகர் விஷ்ணு விஷால் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இந்​தப் படத்துக்​காகக் கடந்த 10 மாதங்​களாகத் தீவிர​மாகத் தயா​ராகி வந்தேன். சமீபத்​தில் படத்​தின் இயக்​குநருடன் படைப்பு ரீதி​யான கருத்து வேறு​பாடு​கள் மற்​றும் பட்​ஜெட் தொடர்​பான சிக்​கல்...
பாலாஜி தரணிதரன் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடிக்​கும் படத்​துக்​கு, ‘பத்​தா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ‘நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘சீதக்​கா​தி’ படங்​களுக்​குப் பிறகு இவர்​கள் 3-வது முறை​யாக இணை​யும் படம் இது. இதில் லிஜோமோல் ஜோஸ் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு செல்​வகு​மார் எஸ்கே ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இயக்​குநர் அட்லி வழங்​கும் இப்​படத்​தை, ஏ ஃபார் ஆப்​பிள் ஸ்டூடியோஸ், ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்​றும் சினி 1...
தென்​னிந்​தி​யத் திரைப்​படத் தொழிலா​ளர் சம்​மேளனத்​துக்​கு (பெப்​சி), 2 வருடத்​துக்கு ஒரு முறை தேர்​தல் நடை​பெறு​வது வழக்​கம். இந்​நிலை​யில் இதன் தலை​வ​ராக ஆர்​.கே.செல்வமணி போட்​டி​யின்றி மீண்​டும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தொடர்ந்து 5-வது முறை​யாக பெப்சி தலை​வ​ராகி​யுள்ள அவர் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​த​போது கூறிய​தாவது: தமிழ் சினிமா தற்​போது சிரம​மான நிலை​யில் இருக்​கிறது. அதாவது சில திரைப்​படங்​கள் பல கோடி வசூலை எட்​டு​வதும் சில திரைப்​படங்​கள் திரையரங்​கு​களில் கூட வெளி​யிட முடி​யாத சூழலிலும் இருக்​கின்றன. நான் இயக்​குந​ராக...
சிவ​கார்த்​தி​கேயன் ஹீரோ​வாக நடிக்​கும் ‘சேயோன்’ படத்தை ‘தாய் கிழ​வி’யை இயக்​கிய சிவகு​மார் முரு​கேசன் இயக்கி வரு​கிறார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல், டர்​மரிக் மீடியா சார்​பில் கமல்​ஹாசன், ஆர்​.மகேந்​திரன் இணைந்து தயாரிக்​கின்​றனர். சந்​தோஷ் நாராயணன் இசை அமைக்​கிறார். பாக்ய  போர்ஸ் நாயகி​யாக நடிக்​கும் இதில் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்​ல​னாக நடிக்​கிறார். மதுரை பின்​னணி​யைக் கொண்ட கிராமத்​துக் கதை​யான இதன் 2-வது கட்​டப் படப்​பிடிப்பு தொடங்​கி​யுள்​ளது. இதற்​காகப்...
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருக்கும் எனது 38-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும். ஒரு வலிமையான புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது’...
புரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தில் தபு கதாபாத்திரத்தை சொல்லும் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கிளிம்ப்ஸ், தபுவை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. படத்தில் அவர் கவுரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில், கெத்து காட்டும் வருமான வரித்துறை அதிகாரியாக வருகிறார்.  கடமையில் கண்டிப்புடன் இருக்கும் அவர், அதிகாரம் செலுத்துபவராகவும், ஆளுமை மிக்கவராகவும் இருக்கிறார்....
‘டேர் டேவில்’ படம் குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், சிறந்த கமர்ஷியல் இயக்குநருக்கான விருது பெற்று பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாருடன் தான் இரண்டாவதாக இணையும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது “‘குட் பேட் அக்லி’ படத்துக்கு என்ன விருதுகள் கிடைத்தாலும் அதை நான்...
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் இடம்பெற்றுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னையில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரது சகோதரி கதீஜா விளக்கம் அளித்துள்ளார். கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே இன்று அதிகாலை 3:30 மணியளவில் அமீன் தனது நண்பருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான காயங்கள்...