கடனை திரும்ப செலுத்தும் வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா...
நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக அண்மையில் பாலிவுட் சினிமா நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தெரிவித்தார். இது பேசுபொருளாகி உள்ளது.
“எனக்கு தூங்குவது ரொம்பவும் பிடிக்கும். நாம் அதிகம் நேசிப்பவர்கள் தூங்க செய்ய வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். தூக்கத்தில் இருக்கும் ஒருவரை எழுப்புபவர் எதிரிக்கும் சமம். விடுமுறையை கொண்டாடுவதற்கு முன்பு நல்ல தூக்கம் தேவை. இதை நான் எல்லோருக்கும் அறிவுரையாக சொல்வேன்.
நான் எப்போதும் எனது...
பிரதீப் ரங்கநாதன்ன் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டியூட்’ மற்றும் ‘எல்ஐகே’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக தங்களது வெளியீட்டை தள்ளிவைப்பதாக ‘எல்ஐகே’ படக்குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதி ‘எல்ஐகே’ வெளியாகும் என பாடல்களும் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘எல்ஐகே’ படத்தின் வேலைகள் முடிவடைந்தாலும், சரியான திரையரங்குகள் கிடைக்காது என படக்குழு கருதுகிறது....
“மற்ற திரையுலகினரைப் போல, தமிழிலும் புதிதாக முயற்சிக்க வேண்டும்” என்று நடிகர் கார்த்தி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன், பிரபலங்களும்...
வெற்றிமாறன் – சிம்பு இணையும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
‘அரசன்’ படப்பிடிப்பு முதலில் நவம்பரில் துவங்குவதாக இருந்தது. அப்போது வேல்ஸ் நிறுவனம் – சிம்பு...
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
போயப்பத்தி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘அகண்டா 2’. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பாலகிருஷ்ணா. இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது.
பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விருத்தி சினிமாஸ் நிறுவனம்...
’ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது.
‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய காட்சிகளை கோவாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இதில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பதினை தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. அதன் மூலம் இப்படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
ரஜினி – விஜய்...
‘தேவாரா 2’ படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரட்டலா சிவாவின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவாரா’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், அப்படத்தின் கதை முடியாத காரணத்தினால் 2-ம் பாகம் உருவாக இருந்தது. ஆனால், படமோ எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
சமீபத்தில் ‘தேவாரா’ வெளியாகி ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு படக்குழுவினர் 2-ம்...
பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவ.25 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
“பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பிரச்சாரம், ஆன்லைன் வன்முறை, துஷ்பிரயோகம், தொழில்நுட்பம் மூலமாக ஏற்படும் மிரட்டல்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்த முயற்சியில் இணைந்தது குறித்துப்...
ஒளிப்பதிவுக்கான லென்ஸ் தேர்வே, ஒரு காட்சியின் மறைமொழியாக இருக்கிறது. சினிமா என்பது காட்சிகளின் தொடர்ச்சி, அது உணர்வுகளின் தீவிரமான பயணம்.
இந்தப் பயணத்தில் காட்சியின் ஒவ்வொரு தருணத்தையும் மனநிலையையும், தொனியையும், பார்வையாளர் எந்த உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவை கேமரா லென்ஸ்கள். ஒவ்வொரு லென்ஸும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மொழியைப் பேசுகிறது. அது காட்சியின் ஆழத்தையும், பரப்பையும், அளவையும் வடிவமைக்கும் மந்திரம்.
லென்ஸ்களின் வகைகள்: அழகியலும் உணர்ச்சியும் - ஸ்பெரிக்கல் லென்ஸ்கள் இயல்பான...
