’96’ படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தை விளம்பரப்படுத்தும்போது ‘96’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கதை மட்டுமே எழுதி வருவதாகவும், இன்னும் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரிடம் சொல்லவில்லை எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ‘96’ 2-ம் பாகத்தை தயாரிக்க டான்...
மறைந்த நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ளிம்ஸ் வீடியோ எப்படி? - தொடக்கத்தில் இந்திரா காந்தி போல ஒருவர் காட்டப்படுகிறார். அவர் அன்றைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்துகொண்டிருக்கும்போது எல்லா இடத்திலும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களே நிரம்பியிருக்கின்றன. யார் இந்த சில்க்? என்று கேட்க, அடுத்து சில்க் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரிகா ரவி...
புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின. சுதந்திரத்துக்குப் பிறகு முழுமையாக சமூக கதைகளுக்குத் திரைப்படங்கள் மாறினாலும் சரித்திர, பக்திப் படங்களும் ஒரு பக்கம் தொடர்ந்து உருவாகி வந்தன. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘சக்ரதாரி’. கோரா கும்பரின் கதையை மையப்படுத்தி உருவான படம் இது. கோரா கும்பராக சித்தூர் நாகையா நடித்தார். அவர் மனைவி துளசி பாயாக...
‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியீடு என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனிடையே பெரும் சிக்கல் ஒன்று படக்குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறது. என்னவென்றால், ‘விடாமுயற்சி’ திரைப்படம் ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் டீஸர்...
செல்போனை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், 'ரிங் ரிங்'. ‘போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைன் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, கந்தகோட்டை, ஈகோ படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கி உள்ளார். இதில் விவேக் பிரசன்னா, சாக் ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் நடித்துள்ளனர். வசந்த் இசைப்பேட்டை இசை அமைத்துள்ள இதன் பாடல்களை பா. ஹரிஹரன் எழுதியுள்ளார். தியா...
சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியே வர முடிந்ததா?...
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். கதாநாயகியாக தேஜு அஸ்வினியும், ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார்....
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது எக்ஸ் தளப் பக்கத்தைச் செயலிழக்க வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளியேற அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதே காரணம் என கூறப்படுகிறது. நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, நடிகர்...
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் வரை” (untill we meet again) என பதிவிட்டு உடைந்த ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். மேலும், ஜோசஃப் பிரபுவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. சென்னையில் பிறந்தவர் சமந்தா. இவரது தந்தை ஜோசஃப் பிரபு, தாய் நினேட்...
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ’அமரன்’ படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்தப்...