பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபலமானார். தமிழில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் ஊழல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்திப் படம் ‘கூஷ்கோர் பண்டட்.
இதை, ‘எ வெனஸ்டே’, ‘ஸ்பெஷல் 26’, ‘எம்.எஸ்.தோனி: த அன்டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும்...
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ரஜினி காந்தின் 174-வது படமான இது, கமல்ஹாசனுக்கு 238-வது படம்.
இது தொடர்பான...
அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கியவர்.
ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி சர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃபோ டெயின்மென்ட் சார்பில் பெப்சி வி.எஸ்.பாலமுரளி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி ஜீவா சங்கர் கூறும்போது,...
தமிழில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
சில வருடங்களாக சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் 7 வருடங்களாக, தான் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் 15 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஏழு வருடங்களுக்கு முன் வீட்டுக்குள் ஒரு விபத்தைச் சந்தித்தார் முமைத் கான். அதில் அவர் மூளையில்...
பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளாகத் தொல்லைஅளித்துவரும் நபர்களிடம் இருந்து தன்னையும் தனது நண்பர்கள், குடும்பத்தினரையும் பாதுகாக்கக் கோரி அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு...
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக தனுஷா நடிக்கிறார். பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரொமான்ஸ் காமெடி கதையாக உருவாகியுள்ள இப்படத்தை, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். பிப்.13-ல் வெளியாகும் இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில்,...
சூரி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கோடையில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இதன்...
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். ‘மின்னலே’-வில் தொடங்கிய அவரது திரைப் பயணத்தில் 20 படங்களை இயக்கி இருக்கிறார். இதை அடுத்து ‘என்னோடு வா வீடுவரைக்கும்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். சமீபத்தில் அவருடன் உரையாடியதில் இருந்து...
Q
அமைதியா ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிருக்கீங்க...
A
இந்த மாதிரி ஒரு பங்ஷன் நடத்தணும்னு 5 வருஷமா மனசுல இருந்தது. ‘துருவ நட்சத்திரம்’ படப் பிரச்சினை காரணமா...
'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆதித்யா தர், அடுத்து கையில் எடுத்துள்ள ஓர் அதிரடியான ஆக்ஷன் களமே ‘துரந்தர்’. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், தற்போது ஓடிடியில் ரிலீஸாகி உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது இப்படம்.
90-களின் இறுதியில் இந்தியாவில் நடந்த சில பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு, அதில் சில கற்பனைகளையும் கலந்து,...
‘யூத்’ படத்தின் அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டு விட்டதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘யூத்’. இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி, தமிழக திரையரங்கம் என அனைத்து உரிமைகளுமே விற்கப்பட்டு விட்டது. இதனால் படக்குழுவினருக்கு இப்போதே நல்ல லாபம் கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.
’சிறை’ நாயகி அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சுரமுடு, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கென் கருணாஸ்...
