வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர். டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராஃப் வெட்டிக்...
கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ’விடுதலை 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன்,...
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, நடித்து ஹிட்டான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. டிச. 5-ல் வெளியாக இருக்கும் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம், “உங்களின் வருங்கால கணவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா, வெளியிலிருந்து வரப் போகிறாரா?’ என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா,...
நடிகை சமந்தா, வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷனுக்காக வருண் தவானும், நடிகை சமந்தாவும் கேள்விக் கேட்டுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முன்னோட்டம் இப்போது பிரைமில் வெளியாகியிருக்கிறது.
அதில், வருண் தவண், “உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் எந்த விஷயத்துக்காக அதிகம் செலவு செய்திருக்கிறீர்கள்?" என சமந்தாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, “அது என் ‘எக்ஸ்’-க்கு...
சின்னத்திரை நட்சத்திரங்களான அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் உட்பட பலர் சினிமாவில் அறிமுகமாகும் படம், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’. ‘நவரச கலைக்கூடம்’ சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். எம்.எல்.சுதர்சன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம்பற்றி...
சித்தார்த் நடித்திருக்கும் ‘மிஸ் யூ’, வரும் 29-ம் தேதி வெளியாகிறது. காதல் கதையான இந்தப் படத்தை என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடித்திருக்கும் இதில் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா உட்பட பலர் இருக்கின்றனர். படத்தின் புரமோஷனில் தீவிரமாக இருக்கும் சித்தார்த்திடம் பேசினோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கதையில நடிச்சிருக்கீங்க…
‘சித்தா’ படத்துக்கு கிடைச்ச வரவேற்புக்குப் பிறகு கலகலப்பான, ஜாலியான படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. அப்பதான்...
சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரிகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், ‘டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அநாகரிமான முறையில்...
“கனிமொழிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்கா அனுப்பும் ஆட்கள் தான் என்னை அழைத்துச் செல்வார்கள்” என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினர். அதில் தங்கள் இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து இருவரும் பல்வேறு...
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோஹினி தே தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதையடுத்து சில சமூக ஊடகங்களிலும் யூடியூப்பிலும் இவர்கள் பற்றி...
‘தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக மக்கள் பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் குஷ்பு - சிவகார்த்திகேயன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் குஷ்புவின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.
அப்போது திரையுலகில் நடிகராக வலம் வருவது குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன், “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு...










