இரணியல்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சியாமளா (65). கடந்த 22ஆம் தேதி கணவருடன் பைக்கில் செல்லும்போது திடீரென பைக் பஞ்சர் ஆனதாகத் தெரிகிறது. இதில் பைக் நிலைதடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த சியாமளா தவறி கீழே விழுந்து, அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குமரி அரசு...
அருமனை: யுகேஜி மாணவன் தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்
அருமனை பகுதி சேர்ந்த சஜி-ஆஷிகா தம்பதிக்கு 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சம்பவ தினம் மாணவனை பள்ளி ஆசிரியர் அடித்து, கை கால்களில் வீக்கம் ஏற்பட்டு, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்...
மார்த்தாண்டம்: தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது ஸ்மைலின் என்ற பெண் பலியானார். இதையடுத்து இறந்த பெண்ணின் உறவினர்கள் சடலத்துடன் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆஸ்பத்திரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் சடலத்தை...
குலசேகரம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நேற்று இவர் அங்குள்ள வங்கிக்குச் சென்று தான் அடமானம் வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டு, மற்றும் ரூ. 10 ஆயிரத்தை பையில் வைத்து பஸ்ஸில் ஏறி அவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில்...
நித்திரவிளை: கடற்கரையில் மது அருந்திய வாலிபர்கள் கைது
பூத்துறை கடற்கரை பகுதியில் நேற்று (ஜூன் 30) இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மது அருந்திக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த...
களியக்காவிளை: வணிகர் சங்க இடைத்தேர்தலில் நசீர் வெற்றி
களியக்காவிளையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிகர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இடைத் தேர்தல் கடந்த ஜூன் 26-ம் தேதி நடந்தது. தேர்தலில் நசீர், ஆல்பர்ட்சிங் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5...
ராஜாக்கமங்கலம்: பெண்ணின் வீட்டில் நகை மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அழகன்விளையை சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள், அரசு பஸ் டிரைவர். இவருடைய தங்கை ரெகுபதி, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்றார். இதையடுத்து தனிமையில் அவதிப்பட்டு வந்த ரெகுபதியை கவனித்துக் கொள்ளும் வகையில்...
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தேசிய சுகாதார பணி நிர்வாக ஆலோசகர் ரத்னகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு, ஸ்கேன்...
நாகர்கோவிலில் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு முகாம்
முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய பயனாளிகளிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
முகாமில் நாகர்கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதிகளை...
இரணியல்: 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
இரணியல், மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் அனீஸ் குமார் - சோனியா தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கடந்த மே மாதம் 16ஆம் தேதிக்குப் பின் 3 பேரும் வீட்டில் இருந்து மாயமாகினர். ஜூன் 2-ம் தேதி பள்ளி திறந்தபோதும் மாணவியை பள்ளிக்கு...













