Google search engine

மார்த்தாண்டம்: கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண் (27). இவரது தந்தை, தாய், சகோதரன் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தனர். இவர் தனது பெரியப்பா விஜயன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கார்  டிரைவராக வேலை செய்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த...

மார்த்தாண்டம்: கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). கொத்தனார். இவரது வீட்டு அருகில் உள்ள ஜெகதீஷ் (50) என்பவர் 6 நாய்களை வளர்த்து வருகிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது மகன்...

ராமன்துறை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). கடல் தொழில் செய்து வந்தார். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை அந்தோணி பிள்ளை மனைவி மரியபுஷ்பம் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள ஆற்றிற்கு சென்றார். அப்போது வீட்டில்...

நித்திரவிளை: உதவும் கரங்கள் சார்பில் நல உதவிகள்

நித்திரவிளை அருகே, காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பாக நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 68 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை வகித்தார். செயலாளர் சுகன்யா, பொருளாளர் சஜின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்...

நாகர்கோவிலில் முன்னாள் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணியாகுளம் பாறையடியை சேர்ந்தவர் உமா (வயது 42). இவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "நான் கடந்த 18-3-2025 அன்று கணியாகுளம் சந்திப்பில் சென்றபோது புளியடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு வந்தார்....

நாகர்கோவில்: ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி; பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் S. L. பி அரசு HSS மைதானத்தில் குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 13ஆவது மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி...

நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் திடீரென மயங்கி அங்கேயே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதியவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்...

பறக்கை, வடிவீஸ்வரம் பகுதிகளில் 10-ந் தேதி மின்தடை

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., முகிலன்விளை, அம்பலபதி, காடேற்றி, வீரபாகுபதி, சொத்தவிளை, அரியபெருமாள்விளை, கக்கன்புதூர்,...

மணவாளக்குறிச்சி:  மாயமான ஐஆர்இஎல் தொழிலாளி சடலமாக மீட்பு

மணவாளக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுவாமி பெருமாள் (74) ஓய்வு பெற்ற ஐஆர்இஎல் தொழிலாளி. கடந்த 4ம் தேதி வங்கிக்கு சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று சேரமங்கலத்தில் ஒரு தென்னந்தோப்பில் சுவாமி பெருமாள் இறந்து கிடப்பதாக...

புதுக்கடை: பள்ளி மாணவி மீது பைக் மோதல்

தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் பத்மா மகள் ரெஜிஸ்மா (13). இவர் கீழ்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் பள்ளிக்கூடம் செல்வதற்காக பஸ்சிலிருந்து இறங்கி பள்ளி நோக்கி சாலையில் நடந்து செல்லும்போது, வேகமாக வந்த பைக் ஒன்று மாணவியை மோதி தள்ளியது....