Google search engine

கணவர் வெட்டியதில் மனைவி பலி: தக்கலையில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடும்பத் தகராறில் கணவர் பழனி கத்தியால் குத்தியதில் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம்: மாமியாரை தாக்கிய மருமகள் -2 பேர் மீது வழக்கு

திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர், தனது மகன் அஜின்குமார் வீட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி அஸ்வினி மற்றும் அவரது சகோதரி ஜெனிமோள் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஸ்வினி...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 30ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்கள் ஸ்டாலின் முகங்கள்' நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்கு குருசடி அந்தோனியார் சமூகத்தில் கூடம், கொல்லங்கோடு நகராட்சி 10, 11, 17வது வார்டுகளுக்கு காஞ்சாம்புறம் கைரளி மண்டபம், கொட்டாரம் பேரூராட்சி 1...

மணவளக்குறிச்சி: பெண்ணை தாக்கிய கணவன் மனைவி மீது வழக்கு

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புனிதா (56) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஜோன்சிங் (52) மற்றும் அவரது மனைவி டெல்மா (50) ஆகியோர் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கேட்டபோது, ஜோன்சிங் மற்றும் டெல்மா ஆகியோர் புனிதாவை தாக்கியுள்ளனர். காயமடைந்த டெல்மா...

குளச்சல்: சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மாணவ மாணவியர் ஒரு...

திற்பரப்பு: அருவியல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக கோதையாறு, பரளியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு தற்போது சுற்றுலாப்...

கடையாலுமூடு: பேரூராட்சி கவுன்சிலர் மீது தாக்குதல் – வழக்கு

கடையாலுமூடு பேரூராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரனுக்கும், தேங்காய் வியாபாரி தேவதாஸுக்கும் இடையே குடிநீர் குழாய் தோண்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தேவதாஸ், ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கடையாலுமூடு போலீசார் தேவதாஸ் மீது வழக்கு பதிவு...

வெள்ளிச்சந்தை:   போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிசந்தையில் நேற்று நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் போட்டியை துவக்கி வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில், ஹரிஷி முதல் பரிசையும், அஸ்வின் இரண்டாம் பரிசையும், சச்சின்...

காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்

காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் நேற்று 28-ம் தேதி தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் குறித்து மாஸ்தரன் சிங் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் சிந்துகுமார், சுரேஷ், குமரி முத்தமிழ்...

நித்திரவிளை:   பைக் ஓட்டிய சிறுவன் தாய் மீது வழக்கு

நித்திரவிளை அருகே, 15 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் வாகன சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, பைக் சிறுவனின் தாயாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஷோபா (39) மீது...