கிள்ளியூர்: அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இனயம் புத்தன்துறை, கொல்லங்கோடு, கருங்கல், முள்ளங்கினா விளை, திப்பிரமலை ஊராட்சி, பேருராட்சி பகுதிகளை உள்ளடக்கிய பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கான கூட்டம் நேற்று இனயயம் புத்தன்துறையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநில அமைப்பு...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுபுரை தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை, அனிஷ் என்பவரின் நண்பர்களான ஜெரின்ஜோஸ், ரமேஷ் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின்...
குளச்சல்: நாளை உலக மீனவர் தினத்தில் போராட்டம் நடத்த முடிவு
கேரளாவில் தொழில் செய்யும் குளச்சல் சுற்றுவட்டார விசைப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடமைக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தாக்குதல்கள் நடைபெறுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல் அனைவருக்கும் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, நாளை உலக மீனவர் தினமான 21ஆம் தேதி, சைமன்காலனி மீன்பிடி...
குலசேகரம்: இயற்கை மருத்துவ முகாம் அமைச்சர் பங்கேற்பு
குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாமில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் இயற்கை மருத்துவம் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டு, அதனைத் தயார் செய்த மாணவர்களைப் பாராட்டினார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்...
குழித்துறை: முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குழித்துறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார...
பளுகல்: வீட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை
பளுகல் அருகே வன்னியூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரவீந்திரன் (56) தனது குடும்பத்துடன் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து ரவீந்திரன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....
குமரி: இரவு 10 மணி வரை மழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, கோவை, தென்காசி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
நீரோடி: கடலில் மாயமானவர் உடல் கேரளா கடலில் மீட்பு
குளச்சல், மேலமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய அருள் (32) மற்றும் சேவியர் ஆண்டனி சுபன் (31) ஆகியோர் கடந்த 17ஆம் தேதி பைபர் படகில் நீரோடி கடல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் அலை காரணமாக படகு அலை தடுப்பு சுவரில் மோதி சேவியர் ஆண்டனி...
நாகர்கோவிலில் மருந்து விற்பனை பிரதிநிதி மீது தாக்குதல்
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கோபி (38) மாடன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது, விஜய் (25) உள்ளிட்ட 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காயமடைந்த கோபியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து...
மண்டைக்காடு: கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு
கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற ரத்தினம் (65), அவரது மகன் சொக்கலிங்கம் (40) ஆகியோர் கடலில் கால் நனைக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி ரத்தினம் உயிரிழந்தார். மீனவர்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மரைன் போலீசார்...













