Google search engine

குமரி: போதையில் கஞ்சா புகைத்த 13 மாணவர்கள் கைது

பள்ளியாடியில் நேற்று ஒரு வீட்டை பூட்டி, கும்பலாக கஞ்சா புகைப்பதாக மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு கிடைத்த தகவலின் பேரில், தக்கலை தனிப்படை போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மது போதையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்...

பார்வையற்றோர் இயலோதோர் கட்டடம் திறந்து வைத்த மேயர்.

நாகர்கோவிலில் பார்வையற்றோர் மற்றும் இயலாதோர் நல அறக்கட்டளை கட்டிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, இன்று மாநகராட்சி கவுன்சிலர் டி. ஆர். செல்வம் தலைமையில் மேயர் மகேஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி...

நாகர்கோவிலில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்து, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

வில்லுக்குறி: மாஜி பெண் கவுன்சிலர் முழு உடல் தானம்

மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த 65 வயதான வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மேரி குளோரிபாய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஏற்கனவே பதிவு செய்திருந்தபடி, அவரது இரண்டு கண்களும் மருத்துவர் குழுவினரால் தானமாக பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவரது உடலும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டு,...

மார்த்தாண்டம்: ஆட்டோக்களில் கியூஆர் கோடு எஸ் பி தொடங்கினார்

மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஒட்டும் தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போலீஸ், மருத்துவமனை உள்ளிட்ட அவசர எண்கள் கிடைக்கும்....

குழித்துறை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், நகராட்சி சார்பில் நேற்று வியாழக்கிழமை நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. குழித்துறை கால்நடை மருத்துவமனை டாக்டர் எட்வின் தாமஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் நகராட்சி...

பாலப்பள்ளம்: தொழிலாளி திடீர் சாவு போலீஸ் விசாரணை

பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ரவீந்திரன், குடும்பத் தகராறு காரணமாக 11 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன் வாழாமல் தனிமையில் வசித்து வந்தார். நேற்று மாலை, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் ரவீந்திரன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்...

கோட்டாரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (39), மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். உறவினர்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு...

நாகர்கோவிலில் ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்கும் நோக்கத்துடன் சம ஊதிய சட்டத்தை மீறி ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை செயல்படுத்துவதை தடுத்தல், கிராம ஊராட்சிகளில் பகுதிநேர தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வழங்குதல், பழைய...

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நாகர்கோவிலில் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை விமர்சித்தார். அவர் கூறுகையில், திமுக ஆட்சி மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும், ஒரு முக்கிய நிர்வாகி ரூ. 3...