புதுக்கடை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்க கோர்ட் உத்தரவு
இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சதாம் மாலிக் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுவரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரை 10.03.2026 அன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குழித்துறை கூடுதல் மாவட்ட செசன்ஸ்...
குமரி: தங்கம் விலை உயர்வுக்கு அறிவிப்பு இல்லை – பிரேமலதா
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும், அதில் தங்கம்,...
குமரி: மாணவன் ஓட்டிய பைக் விபத்து – உறவினர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிங்சிலின் என்பவர், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் மகனுக்கு கடந்த 30ஆம் தேதி பைக்கை ஓட்டக் கொடுத்துள்ளார். அம்மாண்டி விளை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி மாணவன் படுகாயமடைந்தான். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...
பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் டிமொண்ட் வில்சன் காலமானார்
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் டிமொண்ட் வில்சன் (79), புற்றுநோய் பாதிப்பால் அண்மையில் காலமானார். அமெரிக்க தொலைக்காட்சியில் கருப்பினத்தவர்களை முதன்மை பாத்திரங்களாக கொண்ட 'சான்போர்ட் அண்ட் சன்' தொடரின் மூலம் இவர் உலக புகழ்பெற்றார். 'ஃபுல் மூன் ஹை', 'மீ அண்ட் தி கிட்' போன்ற வெற்றி...
திக்குறிச்சி: கோயில் சாலையை சீரமைக்க பசு மாடுக்கு மனு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளாக செப்பனிடப்படாததை கண்டித்து விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் பக்தர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கல்வெட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவர்கள், கோயில் பசு மாடு மற்றும் தாமிரபரணி நதிக்கு...
கருங்கல்: ரூ 10 லட்சத்தில் புதிய பாலம் எம்எல்ஏ திறந்தார்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட காக்கவிளையிலிருந்து காட்டுக்கடை செல்லும் கிளை கால்வாய் குறுக்கே பழுதடைந்திருந்த சிறு நடைபாதை பாலம், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு, நேற்று எம்எல்ஏ ராஜேஷ்குமார் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ்...
வெள்ளிச்சந்தை: வெல்டிங் தொழிலாளி திடீர் மாயம்
வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வினிஷ் (23) கடந்த 24ஆம் தேதி கோயில் கும்பாபிஷேக விழாவிற்குச் சென்று வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை விஷ்ணு வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வினிஷை தீவிரமாகத்...
கடையாலுமூடு: வீட்டை இடித்து சேதப்படுத்திய யானை கூட்டம்
கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட ஒருநூறாம் வயல் பகுதியில் ஓமனா (60) என்பவரின் வீட்டை நேற்று (ஜனவரி 30) யானைகள் கூட்டம் புகுந்து சூறையாடியது. வீட்டைச் சுற்றி யானைக் கழிவுகள் கிடந்ததால், யானைகள்தான் சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை...
திருவட்டாறு: பூதத்தான் சாமி கோவிலில் கும்பாபிஷேகம்
திருவட்டாறு அருகே பிரசித்தி பெற்ற கேசவபுரம் இசக்கியம்மன் பத்ரகாளி பூதத்தான் சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. கோவில் தந்திரி நாகராஜன் போற்றி கும்பாபிஷேகத்தை முறையாக நடத்தினார். யாகசாலை பூஜைகள், மூலவர் பிரதிஷ்டை உள்ளிட்ட சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டு,...
குளச்சல்: ஆலயத்தில் புகுந்து போதகருக்கு மிரட்டல்
நெய்யூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் விஜயன் (49) குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஸ்டான்லி (49) என்பவர் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் டேவிட் ஸ்டான்லி மீது...













