நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் அலுவலக ஆவணங்கள், போலீசாரின் வருகைப் பதிவேடு, குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடர்பான ஆவணங்கள், போலீஸ் வாகனங்கள், துப்பாக்கிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து போலீஸ்...
களியக்காவிளை: ஹோட்டல், மனித கழிவுகளுடன் லாரிகள், 2 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குமரி சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், குமரி மாவட்டத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (23-ம் தேதி) காலை...
வெள்ளிச்சந்தை: மீனவர்கள் மீது தாக்குதல்; 12 பேர் மீது வழக்கு
வெள்ளிசந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் தாசன் (39) மீனவர். இவர் சமீபத்தில் நடந்த அன்பிய தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக தாசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கென்னடி, சுரேஷ், ஜெகன் ஆகியோருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
சம்பவ தினம் தாசன் அவருடைய நண்பர் அந்தோணி ஆகியோர்...
தேங்காப்பட்டணம்: பெண் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் மனைவி சிவகனி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயின் (44) அவரது மனைவி சுபி (39) ஆகியோருக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் சிவகனியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஜெயின்,...
நாகர்கோவில்: ஆகாயத்தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் குளத்தின் கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக ஆகியும் கரையில் வைக்கப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆகாயத்தாமரைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி...
குமரி மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. "இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து...
அருமனை: சாலையோர பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி பலி
அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (49). இவரும் இவரது நண்பர் ரவி என்பவரும் கடந்த 19-ம் தேதி கூலி வேலைக்காக காலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் பைக்குடன் இருவரும் விழுந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத...
கருங்கல்: கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. கருங்கல் அருகே கருமாவிளை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா போட்டி மற்றும் பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த...
புதுக்கடை: சாலையில் நடந்து சென்ற மீனவர் திடீர் மரணம்
குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் லூர்தையன் (64). மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று (டிசம்பர் 22) இவர் புதுக்கடை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி...
கிள்ளியூர்: மீன் தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கம்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடியில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்சிறை ஒன்றிய தலைவர் பிராங்க்ளின் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்கலின், ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் உட்பட...













