Google search engine

பேச்சிப்பாறை: தோட்டக்கலை நிலையத்தில் மாணவர்கள் ஆய்வு

ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மை கல்லூரி 20 மாணவ மாணவிகள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு பயணம் செய்தனர். அவர்கள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வர் ஜெயா ஜாஸ்மினை சந்தித்த மாணவர்கள், அங்கு உள்ள அனைத்து வகையான தாவரங்களை நேரில் பார்வையிட்டனர். பின்பு,...

நித்திரவிளை:   கடல் மணல் திருட்டு டெம்போவுடன் 2 பேர் கைது

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக நள்ளிரவில் நித்திரவிளை போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இரவு ரோந்து அதிகாரி அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அங்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளி வைத்திருந்த டெம்போவை கைப்பற்றினர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த...

புதுக்கடை: மிரட்டி பணம் பறித்த 8 போலி நிருபர்கள் கைது

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சிலர் பத்திரிக்கை நிருபர்கள் என கூறி மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 3) ஜஸ்டின் ராஜை அழைத்து 1 லட்சம் ரூபாயுடன் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியில்...

கருங்கல்: சாலையில் வாலிபர்கள் தாக்குதல்; கண்டு கொள்ளாத போலீஸ்

கருங்கல் அருகே மூசாரி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று (மார்ச் 3) மாலை பள்ளியாடி பகுதியில் இருந்து 2 வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.  பள்ளி அருகே வந்தபோது பின்னால் துரத்திக்கொண்டு வந்த கும்பல் ஒன்று சொகுசுகாரில் வந்து பைக்கில்...

குளச்சல்: மீனவரை தாக்கிய 4 பேர் மீது  வழக்கு

குளச்சல் அருகே வாணியக்குடி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரெமிஸ்(48). மீன்பிடித் தொழிலாளி. இவருடைய வீட்டுக்கு செல்லும் பாதை சற்று குறுகலாக அமைந்துள்ளதால், இந்த பாதை தொடர்பாக ரெமிசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய குருசு மனைவி நிஷா (40) என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த...

மண்டைக்காடு:   பகவதி அம்மன் கோவில் விழா நாளை துவக்கம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரளா பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோவில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நாளை 2-ம் தேதி காலை...

இரணியல்: கொத்தனார் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

இரணியல் அருகே உள்ள பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பச்சையம்மால் (29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்...

மார்த்தாண்டம்: பஸ் நிலையத்தில் 3 பேரிடம் திருட்டு

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இலவுவிளை பகுதியைச் சேர்ந்த சுதா (28) என்பவர் 2 வயது குழந்தையுடன் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு பெண் குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலைத் திருடியுள்ளார். குழந்தை கத்தியதுடன் அந்தப்...

குழித்துறை: பைக் –  வேன் மோதியதில் 2 பேர் படுகாயம்

குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோப்பின் பினு (39). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் அருமனை மாரப்பாடி பகுதியை சேர்ந்த அனில்குமார் (33) ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் (பிப்.27) இரவு சுமார் 7:00 மணி அளவில் ஜோப்பின் பினு...

மார்த்தாண்டம்: படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

சென்னையை சேர்ந்தவர் தீனதயாளன் (45). இவர் சற்று உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சிவகாளிதாசன் என்பவர் வசித்து வந்தார். இதனால் சிவகாளிதாசனும், தீனதயாளனும் நட்பாக பழகி உள்ளனர். தற்போது சிவகாளிதாசன் சென்னையில்...