குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோப்பின் பினு (39). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் அருமனை மாரப்பாடி பகுதியை சேர்ந்த அனில்குமார் (33) ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் (பிப்.27) இரவு சுமார் 7:00 மணி அளவில் ஜோப்பின் பினு நண்பர் அனில் குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு குழித்துறையில் இருந்து அருமனை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்தலை என்ற பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோப்பின் பினு, அனில் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஜோப்பின் பினு குழித்துறை அரசு மருத்துவமனையிலும், அனில்குமார் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் மீது மோதிய ஆம்னி வேன் டிரைவர் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.