தக்கலை: சாராய ஊறல் பறிமுதல்; ஒருவர் கைது
பேச்சிப்பாறை பகுதியில் நேற்று (பிப்.26) கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அறிந்த தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சதீஷ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப், மரப்பலகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்...
குலசேகரம்: நீதிமன்ற முத்திரை உடைத்தவருக்கு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர், கடந்த 22.8.2017 அன்று பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது, நீதிமன்ற ஊழியர்களை அவதூறாகப் பேசி, கையெழுத்து நோட்டை வீசி, நீதிமன்ற முத்தரையையும் உடைத்து எறிந்துவிட்டு ஓடினார். தக்கலை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு...
மேல்புறம்: வளர்ச்சி பணிகளை துவக்கிய விஜய் வசந்த் எம் பி
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை நேற்று விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும், பாகோடு பேரூராட்சி பகுதியில் இணைப்பு பாலம் மற்றும் பல்நோக்கு...
குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்த பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ₹35 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை நேற்று கைது செய்தனர். 2025 ஜூன் 17 அன்று நடந்த...
குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு
குமரி - கேரளா எல்லைப் பகுதியான ஐங்காமத்தைச் சேர்ந்த ஜெயன் (55) என்பவர், குறும்பனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குளச்சல் போலீசார் உடலை மீட்டு...
குமரி: ஆலயத்தில் வைத்திருந்த அறிவிப்பு போர்டு கிழிப்பு
கல்லுகூட்டம் பகுதியில் நடைபெற்று வந்த தேவாலய விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனை காரணமாக, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் அதனை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து பேரூராட்சி செயலாளர்...
காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்காப்பியர் பிறந்த தினமான மே 1ஆம் தேதி அன்று பள்ளிக் கல்லூரி மாணவியருக்குப் போட்டிகள் நடத்தியும், சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கியும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். ரெஜி கலா...
பூத்துறை: பாழடைந்த வீட்டில் 1600 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பைபர் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் 1600 லிட்டர் மண்ணெண்ணெய் 46 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மண்ணெண்ணெயை...
குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சருக்கு பேரறிவுச் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். அதனைத்...
சின்னமுட்டம்: கடற்கரையில் ஆண் சடலம் போலீசார் மீட்டனர்
குளச்சல் அருகே சின்ன முட்டம் நாராயணசாமிபதி கடற்கரை பாறை இடுக்கில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிக்கி கிடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்...













