Google search engine
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ்...
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று (மார்ச் 11) சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக்...
“தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக சென்றனர். இந்தநிலையில், விண்கலத்தில் தொழில்நுட்ப...
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில்...
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் அல் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்படுவோம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். “நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும்...
நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு தேச பிரதமர் ஜோதம் நபத் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியை உடனடியாக மேற்கொள்ள அந்த நாட்டு குடியுரிமை ஆணையத்திடம் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. “வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது என்பது ஒருவிதமான சுதந்திரம் ஆகும். ஆனால் அது உரிமை அல்ல. விண்ணப்பதாரர்கள் நியாயமான காரணங்களுக்காக குடியுரிமை...
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா - கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவை பன்முகப்படுத்த...
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பணி ஓய்வுக்குப் பிறகு ஈரான் நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர் ஆகியோரின் உதவியுடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்சில் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. பாகிஸ்தானில்...
கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயி​லான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் சிலர் நேற்​று​முன்​தினம் தாக்​குதல் நடத்​தினர். இதில் கோயில் சேதம் அடைந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சக இணை​யதளத்​தில் வெளி​யான பதி​வில் செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது,...