இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு: அதிபர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
admin - 0
ராமேசுவரம்: இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளைக் குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த அதிபர்தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, முந்தையஇலங்கை அரசுகளில் புரையோடிஇருந்த ஊழல், வீண் விரயம்,முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுவேன் என்றும், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேவையற்ற செலவுகளை குறைப் பேன் என்றும் அறிவித்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம்: இந்நிலையில், அநுர...
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது....
சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் பாறையில் மோதியது. இதில் மொத்தம்55 பேர் உயிரிழந்தனர். இந்தவிபத்து, உயிரிழப்பு குறித்து சீனஅரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சீனாவின் புதியஅணு சக்தி நீர்மூழ்கி...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும்: பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்
admin - 0
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இரு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு குறைந்த செல்வாக்கு மட்டுமே உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று...
யாழ்ப்பாணம் முன்னாள் ஆட்சியர் வடமாகாண ஆளுநராக நியமனம்: இலங்கை அதிபர் நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி
admin - 0
அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய அதிபரின் இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம்ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை அதிபர்...
ஹில்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை கடுமையான தாக்குதலை நடத்தியது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் துவம்சம் செய்தது.
ஆனால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஹஜ் முகமது அஃபீஃப், “நஸ்ரல்லாவுக்கு...
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா பொதுச்சபையில் வியாழன் (செப். 26) அன்று உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், “ஐநா பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல் காரணமாக அது முடக்கப்படக்கூடாது. ஐநா சீர்திருத்தப்பட வேண்டும். அதிக பிரதிநிதித்துவத்துடன், அதிகம் பதிலளிக்கக்கூடியதாக அது திகழ வேண்டும்.
நியாயமான விளைவுகளுக்கு மட்டுமல்ல, அவற்றை அடைவதில் நியாயமான பிரதிநிதித்துவத்தையும்...
“பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
admin - 0
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது”...
இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்களுக்கு முன்னதாகவே கலைக்கப் ட்டதால் முதல்முறையாக தேர்வான 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யின்தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதேகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய, இடைக்கால...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு – லெபனானில் பலி 700-ஐ கடந்தது!
admin - 0
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை...










