Google search engine
உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார். ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் போர் தொடங்​கியது. இந்த போர் தொடங்கி நேற்​றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ளது. ரஷ்யா​வின் தாக்​குதலால்...
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமர, புதிய அமைச்சர்களை அதிபர் திசாநாயக்க நேற்று அறிவித்தார். கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரிணி அமரசூர்ய (54) நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கல்வி,...
இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார்...
தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் உலகளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது. ஒருவேளை உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தினால் அது ரஷ்யா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும். அப்படி ஏவப்பட்டால், 1000...
டைட்டானிக் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற பெருமையை இந்த பாக்கெட் கடிகாரம் பெற்றுள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் திடீரென பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 2,200-க்கும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை செலவிட்டு உள்ளார். கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போதைய துணை அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார். அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜனநாயக கட்சி சார்பில் ரூ.6,640 கோடி செலவிடப்பட்டது. இதில்...
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி...
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், பள்ளிகளுக்கு...
பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார்.கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை. நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு நேற்று சென்ற மோடியை, அந்நாட்டின் அமைச்சர் நேசாம் எசன்வோ விகே வரவேற்றார். இந்தியாவும், நைஜீரியாவும் பல துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என 2007-ல் முடிவு...
இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் அனுர குமார திசாநாயக்க வரும் திங்கள்கிழமை நியமிப்பார் என்று அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அறிவித்துள்ளது. இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, "புதிய...