இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை...
முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி மதிப்பு பிட்காயினை தவறுதலாக குப்பையில் தூக்கியெறிந்த இங்கிலாந்து பெண்
admin - 0
இங்கிலாந்து பெண் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ். ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கி வைத்துள்ளார். தற்போது அதன் மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி. ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப்...
மெக்சிகோ, சீன பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி: புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டம்
admin - 0
மெக்சிகோ, சீனா, கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதமும், சீனாவின் இறக்குமதிக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக...
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்
admin - 0
தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமை யிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியிருப்பதாவது: நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஆராய்ச்சி மேற்கொண்ட...
கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை...
இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான்...
அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குநராக கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார குழுவில் இருந்த நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம்...
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும் அந்தச்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு...










